காதல் திருமணம் குறித்து மனம் திறந்த நியூஸ் ரீடர் கண்மணி சேகர்.. வைரலாகும் புகைப்படங்கள்..

செய்திவாசிப்பாளர் கண்மணி சேகர் மற்றும் சீரியல் நடிகர் நவீன் ஆகிய இருவரும் கருப்பு நிற மேட்சிங், உடையில் ஒன்றாக நின்று வெளியிட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Continues below advertisement

செய்தி வாசிப்பாளர் கண்மணி தான் சின்னத்திரை நடிகர் நவீனைக் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் மேடை நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். இத்தகவல் தற்போது ரசிகர்களிடம் மிகுந்த டிரெண்டாகிவருகிறது.

Continues below advertisement

 வெள்ளித்திரையை விட சின்னத்திரை பிரபலங்கள் தான் அதிகளவில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகின்றனர். சீரியல் நடிகர் மற்றும் நடிகைகள் மட்டுமில்லாமது செய்திவாசிப்பாளர்களும் அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளார்கள். குறிப்பாக புதியதலைமுறையில் செய்திவாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் மற்றும் சன்டிவியின் அனிதா சம்பத் ஆகியோரின் வரிசையில் தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் கண்மணி சேகர்.  

இவரது அழகான முகம் மற்றும் தெளிவான தமிழ் உச்சரிப்பு, ஹேர்ஸ்டைல், புடவை போன்றவற்றைப் பார்ப்பதற்கே இளைஞர்கள் காத்திருக்கிறார்கள் என்று கூற வேண்டும். காவிரி, மாலை முரசு, ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய கண்மணி சேகர் தற்போது சன்டிவியின் பணியாற்றிவருகிறார். இவர் வாசிக்கும் செய்திகள் சோசியல் மீடியாவில் வலம் வரும் நிலையில் இவரது ரசிகர்கள் அதனை டிரெண்டாக்கியும் வருகின்றனர்.

 

இப்படி ஏராளமான ரசிர்களைக்கொண்ட செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரும், கலர்ஸ் தமிழ் சீரியலில் நடித்துவரும் நவீனும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியது. இந்த செய்தி வதந்தியாக இருக்குமோ? என ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் தான், சமீபத்தில் கண்மணி தனது இன்ஸ்டா பக்கத்தில் நவீனுடன் இருக்கும் குடும்ப புகைப்படத்தைப் பகிர்ந்ததோடு பேமிலி என குறிப்பிட்டிருந்தார்.  இதனையடுத்து மகளிர் தின விழாவை முன்னிட்டு கண்மணி மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் போட்டோவைப் பகிர்ந்து நவீன் வாழ்த்தும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இருவரும் கருப்பு நிற மேட்சிங், உடையில் ஒன்றாக நின்று வெளியிட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது. இதனையடுத்து இருவரும் காதலிப்பதும் விரைவில் திருமணம் செய்து கொள்வதுமாக தகவல் பரவியது. இந்நிலையில் தான், இதனை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், நவீன் இருவரும் தங்களது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளனர்.

அதில் பேசிய கண்மணி,  சோசியல் மீடியாவில் மற்றும் பொது இடங்களுக்குச் செல்லும் போது ரசிகர்கள் நிறைய பேர் என்னுடையத் திருமணம் எப்போது என அடிக்கடி கேட்கிறார்கள். ஆனால் நான் எங்க அப்பாவுக்கு பிடித்தது போல் ஒருவரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று காத்திருந்ததாகவும் தற்போது அதுப்போன்று ஒருவர் கிடைத்துவிட்டதாகவும், இப்போது அவரைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் அவர் தான் நவீன் என மனம் திறந்துள்ளார். மேலும் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வருகின்ற ஜூன் மாதத்தில் திருமணம் என்றும் நடிகர் நவீன் மேடையிலேயே அறிவித்தது ரசிகர்களுக்கு மகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola