உகாதி, குடி பத்வா மற்றும் பைசாகி ஆகிய நிகழ்வுகளை முன்னிட்டு, ராதே ஷியாமின் படக்குழு  சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடித்த படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டனர். வழக்கம் போல், புதிய போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் இணையத்தில் வைரல்  எடுத்தது, பிரபாஸின் மில்லியன் டாலர் புன்னகையில் ரெட்ரோ லுக்கில் அனைவரின் மனதையும் ஈர்த்து உள்ளார் .


பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " இந்த அழகான பண்டிகைகளின் கொண்டாட்டங்களில் பிணைப்புக்கான காரணம் அன்புதான். அதை உணருங்கள். அதைப் போற்றுங்கள். அதைப் பரப்புங்கள். அன்புக்குரியவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான உகாதி , குடி பத்வா, பைசாக்கி, விஷு, புத்துண்டு, ஜூர் சிதால், சேட்டி சந்த், போஹாக் பிஹு, நவ்ரே மற்றும் பொய்லா போஷக்"வாழ்த்து சொல்லி பதிவிட்டு இருந்தார் .



ராதா கிருஷ்ணா குமார் இயக்கி, யு.வி கிரியேஷன்ஸ் தயாரித்த ராதே ஷியாம் இந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் . இது இந்தியில் மட்டுமல்ல, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத்திலும் வெளியிடப்பட உள்ளது . தயாரிப்பாளர்கள் படத்தை அறிவித்தபோது, பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேவின் முதல் தோற்றம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. 





படப்பிடிப்பு இரண்டாம் கட்டத்தை நெருங்கியுள்ளது . இந்த மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்ட வேலைகள் தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் . "ராதே ஷியாம்" காதல் கதைக்காக காத்திருப்போம் .