ஜாலியோ ஜிம்கானா (தமிழ்)

பிரபுதேவா மற்றும் மடோனா செபாஸ்டியன் இணைந்து நடித்துள்ள படம் ஜாலியோ ஜிம்கானா. அபிராமி , யோகிபாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சார்லீ சாப்ளின் , கோவை பிரதர்ஸ் , மகா நடிகன் , இனிது இனிது காதல் இனிது , இங்லீஷ்காரண் உள்ளிட்டபடங்களை இயக்கிய சக்தி சிதம்பரம்  இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். 

Continues below advertisement

பராரி

எழில் பெரியவேடி இயக்கத்தில் ஹரிஷங்கர் , சங்கீதா கல்யாண் , குரு ராஜேந்திரன் , சாம்ராட்  சுரேஷ் , புகழ் மகேந்திரன் , பிரேம்நாத் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் பராரி . ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . சாதிய பிரச்சனையை மையப்படுத்திய சமூக அக்கறையுள்ள கதைக்களம் பராரி. நவம்பர் 22 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 

நிறங்கள் மூன்று

துருவங்கள் 16 , மாஃபியா உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் நிறங்கள் மூன்று. அதர்வா , சரத்குமார் , அம்மு அபிராமி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். புராணக்கதையை மையப்படுத்திய த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. 

Continues below advertisement

எமக்கு தொழில் ரொமான்ஸ்

பாலாஜி கேசவன் நடிப்பில் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ரோமேண்டிக் காமெடி திரைப்படம் எமக்கு தொழில் ரொமான்ஸ். அவந்திக மிஷ்ரா , ஊர்வசி , எம்.எஸ் பாஸ்கர் , பகவதி பெருமாள் , அழகம் பெருமாள் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார்.

சூக்‌ஷமதர்ஷினி (மலையாளம்)

நஸ்ரியா நஸிம் பாசில் ஜோசப் நடித்து மலையாளத்தில் உருவாகியுள்ள படம் சூக்‌ஷமதர்ஷினி. எம்.சி.ஜிதின் இப்படத்தை இயக்கியுள்ளார். காமெடி இன்ஸ்வெடிகேடிவ் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர்  தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

I Want To Talk (இந்தி)

பிக்கு , குலாபோ சிதாபோ உள்ளிட்ட படங்களை இயக்கி இந்தி ரசிகர்கள் மத்தியில் கவனமீர்த்தவர் இயக்குநர் சுஜித் சர்கார். தற்போது அவர் அபிஷேக் பச்சன் நடிப்பில் இயக்கியுள்ள படம்தான் I want to talk . 

All We Imagine As Light (மலையாளம்)

பாயல் கபாடியா இயக்கியுள்ள all we imagine as light திரைப்படம் இந்த ஆண்டு சிறந்த இந்திய திரைப்படத்திற்கான சர்வதேச கான் திரைப்பட விருதை வென்றது. கனி குஸ்ருதி , திவய பிரபா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். உலகம் முழுவதும் திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்று தற்போது இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.