Redin Kingsley: நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் நடிகை சங்கீதாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திடீர் திருமணம்:
நடிகர் ரெடின் கிங்ஸ்லி தனது நீண்ட கால காதலியை நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார். திடீரென மைசூரில் நடந்த இந்த திருமணத்தால் ரசிகர்களும், திரை பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், திருமண தம்பதிகளான ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவுக்கு அனைவரும் திருமண வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
ரெடின் கிங்ஸ்லி முதன் முதலில் நடித்த படம் சிம்புவின் வேட்டை மன்னன். படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சில வாரங்களிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் கிங்ஸ்லி நடித்த முதல் படம் வேட்டை மன்னன் என்பது வெளியே தெரியவில்லை. ஆனால், கிங்ஸ்லியை விடாத நெல்சன், அவர் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் அறிமுகப்படுத்தினார். தனது உடல்மொழி மற்றும் வித்யாசமான பேச்சால் முதல் படத்திலேயே கிங்ஸ்லி பெரிதாக ஈர்க்கப்பட்டார்.
ரசிகர்கள் வாழ்த்து:
கிடைத்த வாய்ப்பை கோலமாவு கோகிலா படத்தில் கிங்ஸ்லி சரியாக பயன்படுத்தி கொண்டதால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால் எல்.கே.ஜி., ஏ1, ஜாக்பாட், நெற்றிக்கண், டாக்டர், அண்ணாத்த, இடியட், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், காஃபி வித் காதல், ஜெயிலர் போன்ற படங்களில் நடித்ததால் கிங்ஸ்லி பிரபலமானார்.
இந்த நிலையில் கிங்ஸ்லி தனது காதலியான சங்கீதாவை திருமணம் செய்துள்ளார். இவர்களது காதலுக்கு இருவரது வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தின் போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ரெஜினா நடிப்பில் வெளியான 'செவென்' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான சங்கீதாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து சாதனை பயணம், கபடதாரி, சுல்தான், வலிமை, மாஸ்டர், பாரிஸ் ஜெயராஜ், வீட்ல விஷேசம், ஏய் சினாமிகா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் நடிகர் சஞ்சய் தத் - பூஜா பட் நடிப்பில் 90'ஸ் காலகட்டத்தில் வெளியான 'சதக் 2' படத்தில் நடித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. நடிகை சங்கீதா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஒரே நேரத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
மேலும் படிக்க: Entertainment Headlines: ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் வாழ்த்து.. மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை.. சினிமா ரவுண்ட்- அப்!