2019 –ஆம் ஆண்டு வெளிவந்த அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்தை பார்த்தபிறகு அழுகாத மார்வெல் ரசிகர்களே இருக்கமாட்டார்கள். தி அவெஞ்சர்ஸ் (2012) ஆம் ஆண்டு வெளிவந்த படம், உலகைக் காக்க போராடும் 6 போராட்டக்காரர்களே அவெஞ்சர்ஸ்சாக கொண்டாடப்பட்டார்கள். அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, தோர், ஹல்க், ஹாக்ஐ, பிளாக் விடோவ் என ஒவ்வொருவரும் ஒருவித சக்தி படைத்தவர்கள்.
அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்திற்கு பிறகு அவெஞ்சர்ஸ் 6-ல், மூன்று பேர் இறந்துவிட்ட நிலையில், மற்ற மூன்று வீரர்கள் என்ன ஆனார்கள். இறந்த மூன்று வீரர்களுக்கு பதிலாக யார் இந்த உலகத்தை காப்பார்கள் என்பது பற்றி மார்வெல் அடுத்து அடுத்து வந்த வெப் சீரிஸ் மற்றும் படத்தில் அறிமுகப்படுத்திவைத்தனர்.
அயன் மேன்:
2008-ல் மார்வெலின் முதல் வெற்றிப்படமாக அமைந்தது அயன் மேன். ராபர்ட் டவுனி ஜூனியரின் தத்ரூப நடிப்பால் பல ரசிகர்கள் ஈர்க்கப்பட்டனர். அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்தில் அனைவரின் பேவரைட் கதாப்பாத்திரமான டோனி ஸ்டார்க் என்னும் அயன் மேன் இறந்தது இன்றும் பல ரசிகர்களைக் கண் கலங்கவைக்கும். அதோடு முடிந்ததா அயர்ன் மேன் என்றால் அதுதான் இல்லை. 2023- ஆம் ஆண்டு வெளிவர இருக்கும் “அயன் ஹார்ட்“ வெப் சீரிஸில் வரவிருக்கிறது அயர்ன் மேனின் வாரிசு.
கேப்டன் அமெரிக்கா:
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் படத்தில் அறிமுகமானார் ஸ்டீவ் ரோஜர்ஸ் என்னும் கேப்டன் அமெரிக்க. எப்போதும் அயன் மேனுடன் முரணில் இருக்கும் இவரும் எண்ட் கேம் படத்தில் தனது இளம் வாழ்க்கையை வாழ சென்றதால் தற்போதைய காலத்தில் கேப்டன் அமெரிக்கா இல்லை. இவருக்கு பதில் கேப்டன் அமெரிக்கா: தி வின்டர் சோல்ஜர் படத்தில் அறிமுகமான சாம் வில்சன் தான் புதிய கேப்டன் அமெரிக்கா. தி பால்கன் அண்ட் தி வின்டர் சோல்ஜர் வெப் சீரிசில் இவர் கேப்டன் அமெரிக்காவின் கவசத்தை எற்றுக்கொண்டதும் மீண்டும் உலகத்தை காப்பதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தோர்:
மனிதர்களுக்கு மத்தியில் நார்ஸ் மிதாலஜியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரம் தோர். கடவுளாக இருந்தாலும் மனிதர்களைப் போல குடும்பங்களிக்கிடையில் சண்டை காதல் தோல்வி என எதார்த்தமான வாழ்க்கை வாழும் அசதாரன சக்தி படைத்த இடியின் கடவுள். இவர் சக்திக்காகவே பெறும் ரசிகர் பட்டாளம் உண்டு. இவருக்கு பின் இவரது முன்னால் காதலி ஜேன் ஃபாஸ்டரே இவரது சத்தி பெற்ற கதைதான் தற்போது வெளிவந்த தோர்: லவ் அண்ட் தண்டரின் கதை. இருவரும் இணைந்து சண்டையிடும் காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது.
ஹல்க்:
உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி புரூஸ் பேனர், ஒரு கண்டுபிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக அசாதரன சக்தி பெற்ற சூப்பர்ஹுமன் ஹல்காக மாறினார் புரூஸ். கோபம் வரும்போதெல்லாம் ஹல்காக மாறும் சக்தி படத்தவர் இவர். ஒரு விபத்தின்போது இவரது சகோதரி ஜெனிபர் வால்டர்ஸுடன் இவரது இரத்தம் இணைந்துவிட இவர் புதிய ஹல்காக பயிற்சி பெறும் கதை தான் ஷீ ஹல்க் (She-Hulk).
பிளாக் விடோவ்:
இளம் வயதிலேயே பெற்றோரை பிரிந்து பயிற்சி பெற்ற கொலையாளி இருந்தவர் நடாஷா ரோமனாஃப். அதைவிட்டு வெளிவந்து உலகின் நன்மைக்காக போராடும் அமைப்பு SHIELD – உடன் இனைந்தார் நடாஷா.SHIELD அமைப்பு அவெஞ்சர்ஸை உருவாக்க நடாஷா அதில் ஒருவராக இணைந்தார். இவர் எண்ட் கேமில் இறந்த பிறகு பிளாக் விடோவ்வாக உருவான கதையை வைத்து வெளிவந்த படம் பிளாக் விடோவ். இவரது தங்கை யெலினா பிலோவா மற்றொரு பயிற்சி பெற்ற கொலையாளி இருக்க, நடாஷா எப்படி குடுப்பதுடன் இணைந்தார், இறந்த அக்கா நடாஷாவை யெலினா எப்படி ஏற்றுக்கொள்கிறார், அடுத்த பிளாக் விடோவ்வாக எப்படி மாறுகிறார் என்பது பிளாக் விடோவில் கூறப்பட்டுள்ளது.
ஹாக் ஐ:
பிளாக் விடோவைப் போலவே SHIELD அமைப்பில் தேர்ச்சி பெற்ற உளவாளியாக இருப்பவர் கிளின்ட் பார்டன். கழுகைப்போலவே கூர்மையான பார்வை கொண்டவர் கிளின்ட். இவர் வைக்கும் குறி என்றும் தப்பியது இல்லை. முதல் அவெஞ்சர்ஸ் படத்தில் எந்த சக்தியும் இல்லாமல் வேற்றுகிரகவாசிகளுடன் சண்டைப் போடுவதைப் பார்த்து ஈர்க்கப்பட்ட குழந்தை கேட் பிஷப் சிறு வயதிலிருந்த அம்பேயும் பயிற்ச்சி பெற்று வளர்ந்த பின்னர் கிளின்ட் உடன் இணைந்து சண்டை போடும் காட்சிகள் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.