கோலிவுட் சினிமாவில் பலருக்கும் பிடித்தமான , இன்னும் சொல்லப்போனால் பலருக்கு ரோல் மாடலாகவும் இருக்கக்கூடிய ஜோடி என்றால் அது சூர்யா - ஜோதிகா ஜோடிதான். இன்றைக்கு காதலர்கள் தினம் so சூர்யா ஜோதிகாவை மிஸ் பண்ண முடியுமா?
1999 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் மூலமாக முதன் முதலில் அறிமுகமான இந்த ஜோடி , அதன் பிறகு நட்பு , காதல் என வெவ்வேறு படிநிலைகளை அடைந்தது. ஆரம்பத்தில் ஜோதிகாவிடம் எது உங்களை கவர்ந்தது என கேட்டதற்கு , “ அவர் தனது உதவியாளர்கள் முதல் படக்குழுவனர் வரை அனைவரிடம் ஒரே மாதிரான அன்போடு இருந்தார் “ என்றா சூர்யா. இதே கேள்வியை ஜோதிகாவிடம் கேட்ட பொழுது , “ அவர் பெண்களிடம் பேசுவதற்கு வெட்கப்படுவார் “ அதுதான் முதலில் எனக்கு பிடித்திருந்தது என்றார். பல வருடங்களாக எதிர்ப்பு , போராட்டம் என தொடந்து கொண்டிருந்த காதல் , ரொம்ப ஸ்ட்ராங்கானது. இதனை ஒரு மேடையில் சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவக்குமார் கூறியிருந்தார். கடந்த 2005 ஆம் ஆண்டு , இரு வீட்டாரின் சம்மதத்துடன் சூர்யா , ஜோதிகா திருமணம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
திருமணமாகி 16 வருடங்களான நிலையில் , இரண்டு குழந்தைகளுடன் அன்பான குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர் இந்த தம்பதிகள். வருடங்கள் ஓடினால் என்ன , ” உன் மேல் நான் கொண்ட காதல்..என் மேல் நீ கொண்ட காதல்.. எதை நீ உயர்வாக சொல்வாயோ?” என்ற வரிகளுக்கு ஏற்ற மாதிரியாக வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர். சூர்யா - ஜோதிகா ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பிற்கு எத்தனையோ மேடைகளை உதராணமாக சொல்லலாம். சமீபத்தில் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஜோதிகா , சூர்யா குறித்து கேட்ட கேள்விக்கு “அதற்கு தனியாக ஒரு நிகழ்ச்சிதான் நடத்தனும். அவரை பற்றி சொல்ல அவ்வளவு இருக்கு “ என்றார்.
மேலும் சூர்யாவுக்கு நான் ஒரு காஃபி கூட போட்டுக்கொடுத்தது இல்லை.. அவரும் நான் காஃபி போட்டு கொடுப்பேன்னு எதிர்பார்த்ததில்லை “ என்ற ஒரு வாக்கியத்தில் சூர்யா , ஜோதிகா மீது வைத்திருக்கும் அன்பை போட்டுடைத்தார் ஜோதிகா. அதோடு சூர்யா என்னை ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை, என்மீது அவ்வளவு அன்பும் , மரியாதையும் வைத்திருக்கிறார் , சூர்யாவின் குணங்களில் பாதியையாவது தன் மகன் எடுத்துக் கொண்டால் போதும் என்ற ஜோதிகா காதலை பற்றி ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்கள் ” காதல் என்பது சுயநலமற்றவராக இருப்பது, உங்களுக்குத் தேவையானதை விட மற்றவருக்கு என்ன தேவை என்பதைப் பற்றி அதிகம் சிந்திப்பது... உங்களை விட உங்கள் துணைக்கு அதிக இடம் கொடுப்பது, அதுதான் அன்பு” என்றார். செம்மல்ல.. எனக்கு நிறைய பேரை தெரியும் ..ஆனா சூர்யா போல யாருமே இல்லை. அதனாலதான் நான் சூர்யாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என தன் காதலின் ஆழத்தை வார்த்தையாக உதிர்த்தார் ஜோதிகா.