கருப்பு இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் 

இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் மீது பரவலாக எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன.  கட்சி சேர , ஆச கூட என இவர் வெளியிட்ட இரண்டு பாடல்கள் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைப் பெற்றதைத்  தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. சூர்யா நடிக்கும் கருப்பு , அட்லீ அல்லு அர்ஜூன் படம் , ராகவா லாரன்ஸ் நடிக்கும் பெண்ஸ் , பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டூட் , கார்த்தி நடிக்கும் மார்ஷல் மலையாளத்தில் பால்டி , எஸ்.டி.ஆர் 49 , எஸ்.கே 24 என அடுத்தடுத்து பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக சாய் அப்யங்கர் நியமிக்கப்பட்டார். அவர் இசையமைத்த ஒரு படம் கூட வெளியாகாத நிலையில் இத்தனை பட வாய்ப்புகள் வருவது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். மேலும் பிரபல பின்னணி பாடகர்களின் வாரிசு என்பதால் அவருக்கு இந்த பட வாய்ப்புகள் வருவதாகவும் நெட்டிசன்கள் கூறினார்கள். இப்படியான நிலையில் தான் சூர்யாவின் கருப்பு டீசர் நேற்று ஜூலை 23 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது

Continues below advertisement

சாய் அப்யங்கர் பின்னணி இசை எப்டி இருக்கு?

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45 ஆவது படமாக உருவாகியிருக்கிறது கருப்பு. ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். நேற்று ஜூலை 23 ஆம் தேதி சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. சூர்யா ரசிகர்கள் ஏற்ற மாதிரி ஒரு பக்கா கமர்சியல் படமாக கருப்பு உருவாகியுள்ளதை இந்த டீசரில் பார்க்க முடிகிறது. அதற்கு ஏற்றார்போல் காரம் தூக்கலாம் சாய் அப்யங்கர் பின்னணி இசையமைத்துள்ளார். ஆனால் மற்றொரு தரப்பு ரசிகர்களை இந்த பின்னணி இசை பெரிதாக கவரவில்லை. இதனால் சாய் அப்யங்கரை ட்ரோல் செய்து சமூக வலைதளத்தில் மீம் பகிர்ந்து வருகிறார்கள்.