பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ‘கோல்டன் விசா’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது ஐக்கிய  அரபு அமீரகம் என அழைக்கப்படும் துபாய் அரசு. அந்த வகையில் இந்தியாவில் விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள், கலைத்துறையை சேர்ந்த பலருக்கு கோல்டன் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபனுக்கும் கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கெளரவப்படுத்தியுள்ளது. 


இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன் , “Golden visa -இன்று துபாயில் எனக்கு வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் நான் என்பதாக அதை பெற்றுத் தர முயற்சி எடுத்த  JUMA ALMHEIRI GROUP OF COMPANY-MOHAMMED SHANID (CEO)& இதர நண்பர்கள் சொன்னார்கள்.VISAரித்துப் பார்த்ததில் உண்மைப் போலவே தோன்றியது” என்று குறிப்பிட்டுள்ளார். 


இது ஒரு பக்கம் இருக்கட்டும். பார்த்திபனுக்கு கோல்டன் விசா கிடைத்திருப்பது நெட்டிசன்களுக்கு கண்டெண்டாக அமைந்திருக்கிறது. சேரன் இயக்கத்தில் பார்த்திபன், முரளி, மனோரமா, வடிவேலு நடித்து வெளியான திரைப்படம் ‘வெற்றிக்கொடிகட்டு’. 2000-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் மக்கள் கண்டு களிக்கும் ஹிட் படம். 


மேலும் படிக்க: Dubai Memes: 'காசு கட்டி ஏமாந்தவருக்கு இப்போ விசா கிடைசாச்சு’ - வைரலாகும் பார்த்திபனின் ‘துபாய் மீம்ஸ்’



இத்திரைப்படத்தில் வரும் காமெடி காட்சிகள் மீம் டெம்ப்ளேட்டாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பார்த்திபன் - வடிவேலுவின் துபாய் காமெடிதான் இப்போதைய டிரெண்ட். பணம் கட்டி வெளிநாடு செல்ல முடியாமல் ஏமாற்றப்பட்டவராக, ‘முத்து’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் பார்த்திபன். துபாய் ஏஜென்சி ஆளாக ஆனந்தராஜ் நடித்திருப்பார். இந்நிலையில், இப்போது பார்த்திபனுக்கு துபாய் அரசு விசா வழங்கி இருப்பதை வைத்தும், வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தில் அவர் ஏமாற்றப்பட்டதை வைத்தும் மீம்ஸ்கள் வலம் வருகின்றன.


பல ஆண்டுகளாக துபாய் குறுக்கு சந்தில் வாழ்ந்து கஷ்டப்பட்ட முத்துவுக்கு ஒரு வழியாக விசா கிடைத்துவிட்டது என்றும், முத்துவுக்கு மட்டும் கிடைத்தால் எப்படி, சேகருக்கும், சுடலைமுத்துவுக்கும் விசா வழங்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். ஒரு செய்தி, மீம்ஸாக மாறி, பழைய படத்தை கிளறி, அதோடு ஒப்பிட்டு தனிக்கதை சொல்வதெல்லாம் ‘திறன் லெவல்’. சில மணி நேரங்களில் மீம் மழை பொழிந்த நெட்டிசன்களின் துபாய் மீம்ஸ் இப்போது வைரலாகி வருகிறது. 














ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண