கங்கை அமரன் இயக்கத்தில், ராமராஜன், கனகா நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளியான படம் கரகாட்டக்காரன். மதுரை திரையரங்கில் 425 நாட்கள் திரையிடப்பட்டு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இளையராஜாவின் கிராமிய இசையில் கரகாட்டக் கலைக்கு புத்துயிரும் மதிப்பும் பெற்றுத்தந்த திரைப்படம். இரு கரகாட்டக்கலைஞர்களின் காதலை மையப்படுத்தி, கோர்வையான திரைக்கதையில் உண்டான நகைச்சுவைத் திரைப்படம்.


இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய ஊந்துகோலாக இருந்த கவுண்டமணி - செந்தில் காமெடி என்று சொன்னால் அது மிகையல்ல. அந்தப்படத்தில் வரும் அனைத்து காமெடி காட்சிகளும் ரசிக்கும்படி இருந்தாலும் அதில் வரும் வாழிப்பழம் காமெடியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்கவே முடியாது. எத்தனை முறை கேட்டாலும், பார்த்தாலும் அந்த காமெடி சிரிப்பை உண்டு பண்ணும். அந்த அளவுக்கு கவுண்டமணி - செந்தில் ரியாக்‌ஷன்ஸ் இருக்கும். வேற லெவல் செய்திருப்பார்கள். 




இந்த நிலையில்தான் மாநாடு படத்தை கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு இயக்கி வெளியிட்டுள்ளார். இதில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் எஸ். ஜே. சூர்யா எதிர்மறை பாத்திரத்தில் நடித்துள்ளார். 


சிலம்பரசனுக்கு இப்படம் ஒரு நல்ல ரீ எண்ட்ரி என்று கூட சொல்லலாம். உடலை மீண்டும் பழையமாதிரி கொண்டு வர மிகவும் மெனக்கெட்டுள்ளார் சிலம்பரசன். இப்படத்தில் முதலமைச்சரை கொலை செய்ய திட்டமிடும் எஸ்.ஜே.சூர்யாவின் நடவடிக்கைகளை செத்து செத்து தடுக்க முயற்சிப்பார் சிலம்பரசன். 
அதில் ஒரு சீனில் சிலம்பரசனை சாகவிடாமல் எஸ்.ஜே சூர்யா தடுத்துவிடுவார். அப்போது சிலம்பரசனை கட்டிப்போட்டு எஸ்.ஜே.சூர்யா ‘நான் உன்னிடம் என்ன சொன்னேன்?’ என்று கேட்பார். அதற்கு சிலம்பரசன் ‘வரக்கூடாதுனு சொன்னீங்க’ என்பார். ‘வந்தா என்ன பண்ணுவேனு சொன்னேன்?’ என்று எஸ்.ஜே.சூர்யா கேட்பார். ‘வந்தால் என்னை விட்டுட்டு நெருக்கமானவர்களை கொன்னுடுவேன்னு சொன்னீங்க’ என்பார் சிலம்பரசன். இதையடுத்து சிலம்பரசனின் நண்பர்களை எஸ்.ஜே.சூர்யா சுட்டுக்கொல்வது போன்று காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அப்போது சிம்பு மிகவும் வருத்தப்பட்டு எஸ்.ஜே.சூர்யாவிடம் இந்த ஒரு முறை விட்டுவிடுமாறு கெஞ்சுவார். 


 






உண்மையில் இந்த நீண்ட காட்சியில் நடிகர் சிம்பு ஒரே டேக்கில்  நடித்து அசத்தியிருப்பார். சமீபத்தில் இதுகுறித்த நீண்ட சூட்டிங் வீடியோவையும் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 


 






இந்நிலையில் இணையதளவாசிகள் மாநாடு படத்தின் இந்த காட்சிக்கும் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கவுண்டமணி - செந்தில் வாழைப்பழ காமெடியையும் இணைத்து சிரிப்பலையை உருவாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.