Vijay Vs Ajith: விஜயை வெச்சு 6 கோடியை VFX-க்கு காலிபண்ணிய வெங்கட் பிரபு; ரூ.70-தில் அஜித்தை மாஸாக்கிய ஆதிக்!

குட் பேட் அக்லீ படத்தின் டீசர் வெளியான பிறகு அந்த படத்தின் காட்சியையும், கோட் படத்தின் காட்சியையும் ஒப்பிட்டு இப்போது நெட்டிசன்கள் மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டார்கள்.

Continues below advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், பிரபு தேவா, பிரசாந்த், ஜெயராம், லைலா, சினேகா, மோகன், சிவகார்த்திகேயன் (சிறப்பு தோற்றம்), மீனாட்சி சௌத்ரி ஆகியோர் பலரது நடிப்பில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த படம் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). கடந்த ஆண்டு அதிக வசூல் குவித்த படங்களில் இந்த படம் தான் நம்பர் 1. இந்தப் படத்தில் அப்பா மற்றும் மகன் என்று 2 கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருந்தார்.

Continues below advertisement

கோட் திரைப்படம்:

விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக காட்டியிருந்தார்கள். அதே போல் மகன் விஜய்யின் லுக்கை யங்காக காட்ட வேண்டும் என்பதற்காக VFX காட்சி பயன்படுத்தி இருந்தார்கள். அப்படி அவரது லுக்கை யங்காக காட்ட வேண்டும் என்பதற்காக மட்டுமே ரூ. 6 கோடி வரையில் செலவை இழுத்து விட்டார் வெங்கட் பிரபு.


அஜித்தின் யங் லுக்:

ஆனால் அதுபோல் எதுவும் பண்ணாமல், அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் அஜித்துக்கு 20 ரூபாய் டை மற்றும் 50 ரூபாய் ஷேவிங் என ரூ.70 செலவில் அஜித்தை அமர்க்களம் லுக்கில் காட்டி ஆதிக், அமர்களப்படுத்தி விட்டார் என நெட்டிசன்கள் கமெண்ட்ஸை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

'கோட்' Vs 'குட் பேட் அக்லீ '

மேலும் 'கோட்' பட யங் லுக் சிறப்பா இருக்கா அல்லது 'குட் பேட் அக்லீ ' பட யங் லுக் பெஸ்ட்டா என்று இப்போதே விமர்சிக்க தொடங்கிவிட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அசல், தீனா, மங்காத்தா, வேதாளம் என்று பல லுக் மற்றும் படங்களின் காட்சிகளை இந்த படத்தில் காட்டியிருக்கிறார் என்பதை டீசரை பார்க்கும் போதே தெரிகிறது.



நெட்டிசன்கள் கருத்து 

விடாமுயற்சி கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் 'குட் பேட் அக்லீ 'அதற்கெல்லாம் பதில் கொடுக்கும் ஒரு படமாக இருக்கும் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படத்தில் ஜெயில் செட்டில் ஒரு பாடல் காட்சிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், தீனா படத்தின் இடம் பெற்ற ரீமேக் பாடல் ஒன்று இந்தப் படத்தில் இடம் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி அஜித் ரசிகர்களுக்காகவே பார்த்து பார்த்து உருவாக்கபட்ட படம் என்று 'குட் பேட் அக்லீ' டீசரை பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வெளியான பிறகு கோட் மற்றும் குட் பேட் அக்லீ படங்களின் காம்பேரீசன் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola