உலக நாயகன் கமல்ஹாசன் தலைமையில் கவிஞர் சினேகன் மற்றும் கன்னிகா திருமணம் கடந்த ஜூலை 29 ஆம் தேதி நடைப்பெற்றது. இதில் பல திரையுலக பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். இந்நிலையில் சினேகனுக்கு திருமணம் முடிவடைந்த நிலையில் நேற்று வரவேற்பு நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.  சமூக வலைத்தளங்களில் சினேகன் மற்றும் கன்னிகா தம்பதிகளின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. பலரும் இவர்களுக்கு ட்விட்டர் உள்ளிட்ட  சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஒரு சிலர் சினேகன் திருமணம் குறித்து விமர்சித்து வருகின்றர். அதாவது சினேகன் 14  வருடங்களுக்கு முன்பு  திருமணம் ஒன்றில் கலந்துக்கொண்டார். அந்த திருமணம் அப்போது டைனமிக் திருமணம் என அழைக்கப்பட்டது. அந்த திருமண விழாவில் கலந்துக்கொண்ட சினேகன் ஆரியர்களின் ஆக்கிரமிப்பு தமிழர்களின் மீது படர்வதற்கு முன்னால் எப்படி தமிழன் இருந்தானோ அதனை மீட்கும் புரட்சிக்கான மறுமலர்ச்சிதான் இந்த டைனமிக் திருமணம் என ஆவேசமாக பேசினார். இன்னும் 10 வருடங்களில் சமுதாய புரட்சி மட்டுமல்லாமல் அரசியல் புரட்சியையும் இந்த டைனமிக் திருமணம் ஏற்படுத்த போவதாகவும்  தெரிவித்திருந்தார்.






 


அதன் பிறகு அங்கிருந்த விதவை பெண்கள் தாலி இல்லாமல் மாலை மட்டுமே மாற்றிக்கொண்டு திருமணம் நடைப்பெற்றது. மேலும் மணமகன்களின் நண்பர்கள் மற்றும் திருமண விழாவில் பங்கேற்க வந்த விருந்தினர்கள் அனைவரும் மணப்பெண்களை கட்டியணைத்து , முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த காட்சிகளும் சர்ச்சையை கிளப்பின. இந்நிலையில் நெட்டிசன்கள் சிலர் சினேகன் , டைனமிக் திருமணத்தில் பேசிய வீடியோக்களை ட்விட்டரில் பகிர்ந்து ”எதுவுமே அறியாத எளிய மக்களிடம் dynamic திருமணம் என பொய் சொல்லி ஏமாற்றிய சினேகன். இபோது அவர் திருமணத்தையும் இதே போல செய்வாரா???” என கேள்வி எழுப்பினர். இந்நிலையில் 14 வருடங்களுக்கு முன்னர் அப்லோட் செய்யப்பட்ட டைனமிக் திருமண வீடியோ யூடியூப்பில் 17 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. பலரும் அந்த வீடியோவிற்கு கீழே ”சினேகன் ஏன் டைனமிக் திருமணம் செய்யவில்லை “ என விமர்சனம் செய்து வருகின்றனர்




சின்னத்திரை நடிகை கன்னிகாவிற்கும் , பாடலாசிரியர் சினேகனுக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடைப்பெற்றது. அப்போது நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ‘தாலி’ எடுத்துக்கொடுத்து திருமணம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் எட்டு ஆண்டுகள் காதலித்து பின்னர்  திருமணம் செய்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.