மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மாதா கோவில் துடரி பேட்டை பகுதியை சேர்ந்தவர் செபஸ்டியன் மகன் கேபரியல். 17 வயதான இவர் அப்பகுதியில் தெருவில் விளையாடிய நான்கு வயது சிறுமியிடம் விளையாட்டு காட்டி, சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமியிடம் மாற்றம் தென்பட்டது. இதனை கண்ட பெற்றோர்கள் இதுகுறித்து சிறுமிடம் விசாரித்துள்ளனர். அப்போது கேப்ரியல்  சிறுமியிடம் தவறாக நடந்துக்கொண்ட விபரங்களை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு  போக்சோ சட்டத்தின் கீழ்  கேபரியலை கைது செய்து சீறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவன் என்பதால் அவனை சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த நான்கு வயது சிறுமிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் மூலம் கவுன்சிலிங் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கொரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு காட்டுப்பாடுகள் காரணமாக தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டு சரியான முறையில் இயங்காமல் உள்ளது. குறிப்பாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் குழந்தைகள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடக்கின்றன. இதனால் குழந்தைகள் வீடுகளிலும், வீடுகளில் அருகிலுள்ள நபர்களை மட்டுமே நம்பி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் வக்கிர புத்தி கொண்ட மனித வடிவிலான மிருகங்கள் குழந்தைகளை கடவுளுக்கு நிகராக எண்ணாமல், அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டல்களிலும், சிறு பிள்ளைகளுக்கு திருமண ஆசை ஏற்படுத்துவதும் என துன்புறுத்தல்களும் செய்து வருகின்றன.

Continues below advertisement

உறவினர்கள், நண்பர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவை அழிப்பதில் தற்போது விதிவிலக்காக யாரும் இல்லை. குறிப்பாக இந்த கொரோனோ வைரஸ் தொற்று பரவ தொடங்கி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் முறையாக இயங்காத சூழலில் ஏராளமான பெண் குழந்தைகள் இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் இந்த கொரோனா வைரஸ் தொற்றின் காலத்தில் குழந்தை திருமணங்களும் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு கூடுதல் முக்கியத்துவம் அளித்து இவற்றை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என பல பெற்றோர்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.