தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படத்தில் இருந்து 'நேத்து' என்ற வீடியோ பாடல் வரும் மே மாதம் 22ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் மக்களிடையே அன்பை இந்த பாடல் மூலம் பரப்புவோம் என்று படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த பாடல் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகவிருக்கும் ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்துக்கு 18+ என்கிற மதிப்பீட்டை அந்தத் தளம் வழங்கியுள்ளது. படத்தில் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள், சில கடினமான வார்த்தைகள் ஆகியவை அதிகம் இருப்பதால் இந்தப் படத்திற்கு A தணிக்கை மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்ததே.






வருகிற  ஜூன் 18-ஆம் தேதி தனுஷின் ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ தகவலை ஒய் நாட் ஸ்டுடியோ (y not studio ) தனது ட்விட்டர்  பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து இந்தப்  படம் தமிழ் ,தெலுங்கு , மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஓடிடியில் வெளியாகும் தமிழ்ப்படம் ஒன்று 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 








கடந்த ஆண்டு இறுதியில் ஜகமே தந்திரம் படத்தில் இருந்து என்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி என்ற பாடல் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. கட்டாயம் திரையரங்குகளில் தான் ஜகமே தந்திரம் வெளியாகும் என்றும் ரசிகர்களும் படக்குழுவும் மிகவும் ஆர்வமாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த படம் வரும் ஜூன் மாதம் OTT தலத்தில் நேரடியாக வெளியாகின்றது.