உலகளவில் மிக பெரிய ஓடிடி தளமாக நெட்பிளிக்ஸ் உள்ளது. பெருந்தொற்றுக்கு முன்பு வரை, ஓடிடி தளத்தின் பயனாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனால், கொரானாவுக்கு பிறகு அது அசுர வளர்ச்சியை கண்டுள்ளது. 

திரைப்படங்கள் தொடங்கி வெப் சீரிஸ்கள் வரை  விளையாட்டு போட்டிகளை நேரலையாக ஸ்ட்ரீம் செய்வது தொடங்கி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வரை அனைத்தையும் உள்ளிடக்கிய தொழில்நுட்ப வளர்ச்சியாக ஓடிடி வளர்ந்து நிற்கிறது.

இந்தியாவை பொறுத்தவரையில், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், சோனி லிவ் ஆகியவைக்கு இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது, தென்னிந்தியாவில் பயனாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த நெட்பிளிக்ஸ் முயன்று வருகிறது. அதன் படி, தமிழ்பாடங்களை வாங்கி குவிக்கும் முயற்சியில் நெட்பிளிக்ஸ் இறங்கியுள்ளது.

அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023ஆம் ஆண்டில் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்தவற்கான உரிமம் பெற்ற படங்கள் குறித்து அறிவிப்பை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. மொத்தம், 18 திரைப்படங்களுக்கான உரிமத்தை வாங்கியிருப்பதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.

இந்தப் படங்கள் திரையரங்குகளில் திரையிட்ட பின்னர் ரசிகர்கள் இதனை நெட்பிளிக்ஸ் வாயிலாக பார்த்து ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் வாங்கப்பட்டுள்ள திரைப்படங்களின் பட்டியலை கீழே காண்போம்.

1. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்

   திரைப்படத்தின் பெயர் / ப்ராஜெக்ட்: ஏகே 62

   மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

2. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்

    திரைப்படத்தின் பெயர் / ப்ராஜெக்ட்: சந்திரமுகி 2

    மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

3. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்

    திரைப்படத்தின் பெயர் / ப்ராஜெக்ட்: புரொடக்ஷன் நம்பர் 20

    மொழி: தமிழ்

4. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்

    திரைப்படத்தின் பெயர் / ப்ராஜெக்ட்: புரொடக்‌ஷன் நம்பர் 24

    மொழி: தமிழ்

5. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்

    திரைப்படத்தின் பெயர் / ப்ராஜெக்ட்: புரொடக்‌ஷன் நம்பர் 18

    மொழி: தமிழ்

6. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்

    திரைப்படத்தின் பெயர் / ப்ராஜெக்ட்: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

    மொழி: தமிழ்

7. தயாரிப்பு நிறுவனம்: விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்

    திரைப்படத்தின் பெயர் / ப்ராஜெக்ட்: ஆர்யன்

    மொழி: தமிழ், தெலுங்கு

8. தயாரிப்பு நிறுவனம்: விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்/ RT டீம் வொர்க்ஸ்

    திரைப்படத்தின் பெயர் / ப்ராஜெக்ட்: கட்டா குஸ்தி

    மொழி: தமிழ், தெலுங்கு

9. தயாரிப்பு நிறுவனம்: பேஷன் ஸ்டுடியோஸ்

    திரைப்படத்தின் பெயர் / ப்ராஜெக்ட்: இறைவன்

    மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி

10. தயாரிப்பு நிறுவனம்: பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் எல்எல்பி

      திரைப்படத்தின் பெயர் / ப்ராஜெக்ட்: இறுகப்பற்று

      மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

11. தயாரிப்பு நிறுவனம்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

      திரைப்படத்தின் பெயர் / ப்ராஜெக்ட்: ஜப்பான்

      மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

12. தயாரிப்பு நிறுவனம்: ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ்

     திரைப்படத்தின் பெயர் / ப்ராஜெக்ட்: ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்

     மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி

13. தயாரிப்பு நிறுவனம்: ரெட் ஜெயண்ட் மூவிஸ்

     திரைப்படத்தின் பெயர் / ப்ராஜெக்ட்: மாமன்னன்

     மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

14. தயாரிப்பு நிறுவனம்: தி ரூட் / பேஷன் ஸ்டுடியோஸ்

      திரைப்படத்தின் பெயர் / ப்ராஜெக்ட்: ரிவால்வர் ரீட்டா

      மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

15. தயாரிப்பு நிறுவனம்: ஒய் நாட் ஸ்டுடியோஸ்

     திரைப்படத்தின் பெயர் / ப்ராஜெக்ட்: தலைகோதல்

     மொழி: தமிழ்

16. தயாரிப்பு நிறுவனம்: ஸ்டுடியோ க்ரீன்

      திரைப்படத்தின் பெயர் / ப்ராஜெக்ட்: தங்கலான்

      மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி

17. தயாரிப்பு நிறுவனம்: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்/ ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்/ ஃபார்ச்சூன் ஃபோர்                          சினிமாஸ்

      திரைப்படத்தின் பெயர் / ப்ராஜெக்ட்: வாத்தி, மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

18. தயாரிப்பு நிறுவனம்: சூப்பர் குட் ஃபிலிம்ஸ்

      திரைப்படத்தின் பெயர் / ப்ராஜெக்ட்: வரலாறு முக்கியம் 

      மொழி: தமிழ், இந்தி