நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வை ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் நிறுவனம் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளில் ஒன்றாக அறிப்பட்ட நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி, சரத்குமார், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
மேலும் திருமண புகைப்படங்களை அவ்வப்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். திருமணத்திற்கு பிறகு தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற இந்த தம்பதியினர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிரிந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இதனிடையே திருமண நிகழ்வை ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் ரூ.25 கோடிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் திருமண நிகழ்வை ஒளிபரப்பும் முடிவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் திருமணத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணமான முதல் மாதத்தை கொண்டாடும் வகையில் வெளியிட்டிருந்தார். திருமண புகைப்படங்களைப் பகிர்வதில் அதிக தாமதம் சரியாக இருக்காது, அது சுவாரஸ்யத்தை குறைத்து விடும் என கருதி அவர் பதிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதனை நெட்பிளிக்ஸ் நிறுவனம் விரும்பவில்லை.
மேலும் திருமணத்திற்காக நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் ஒரு பைசா செலவழிக்கவில்லை என்றும், மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறைகளை முன்பதிவு செய்வது முதல் சாப்பாடு,மேக்கப், பாதுகாவலர்கள் வரை அனைத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனமே கவனித்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நிறுவனத்தின் இந்த முடிவால் நயன்தாரா - விக்கி ஜோடி கடும் அப்செட்டில் உள்ளதாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்