சரத்குமார் :
தமிழ் திரையுலகின் சுப்ரீம் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் நடிகர் சரத்குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சரத்குமார் என்றாலே நடிப்பையும் தாண்டி ஃபிட்னஸிற்கு பெயர் போனவர். இன்று 67 வயதிலும் பர்ஃபெக்ட் மேனாக இருக்கும் சரத்குமார் தனது இளம் வயதில் Mr. மெட்ராஸ் பட்டத்தை வென்றவர். இதன் மூலமே நமக்கு நன்றாக தெரிந்திருக்கும் அவர் உடற்பயிற்சி மற்றும் டயட்டில் எத்தனை தீவிரமானவர் என்று. இதில் பியூட்டி என்னவென்றால் இன்று 67 வயதாகியும் ஃபிட்னஸை ஒருபோதும் சமரசம் செய்ததில்லை.
சரத்குமாரின் தினசரி டயட் :
இக்காலத்து இளைஞர்களும் வாயை பிளக்கும் அளவிற்கு இருக்கும் சரத்குமாரின் ஃபிட்னஸிற்கு பின்னால் சில டயட் சீக்ரெட்ஸ் இருக்கிறது. சரத்குமார் ஏதோ ஒரு படத்தை பார்த்துவிட்டு அன்றிலிருந்து அசைவ உணவை சாப்பிடுவதை நிறுத்திவிட்டாராம். தற்போது காலை எழுந்தவுடனே 10 பாதாம் அதனுடன் ப்ளாக் காஃபி அல்லது காஃபி சாப்பிட்டுவிட்டு , உடற்பயிற்சி செய்வதற்காக சென்றுவிடுகிறார். உடற்பயிற்சி முடித்தவுடன் மீண்டும் 10 பாதாம் சாப்பிடுவார். சிறிது நேரம் கழித்து பெர்ரி பழங்களை பால் சேர்க்கப்பட்ட ஸ்மூத்தி அதனுடன் ஒரு இட்லி சாப்பிடுவார். காலை 11 மணியளவில் பீனட் பட்டர் சேர்த்து ஒரு சப்பாத்தியை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்கிறார். அதன் பிறகு மாலை 4 மணிக்கு 10 முந்திரியுடன் , 3 பாதம் சாப்பிட்டு விட்டு , இரவு உணவாக சியா விதைகளுடன் பாதாம் பால் சேர்த்து சாப்பிடுகிறார். இதுதான் தான் பின்பற்றும் டயட் என்கிறார் சரத்குமார்.
செய்யக்கூடாதவை :
மது அருந்துதல், புகை பிடித்தல், நம்மால் கட்டுப்படுத்த இயலாத விஷயங்களை எண்ணி கவலை படுதல் போன்றவற்றை எடை குறைக்க அல்லது ஃபிட்டாக இருக்க விரும்புபவர்கள் செய்யவே கூடாதாம். மேல் பாடிபில்டிங் வேண்டும் என்றால் 50 லுங்குகள், சிட்-அப்கள் அவசியம். உதாரணத்திற்கு என்னால் தற்போது டிரெட்மில்லில் நடக்கவோ ஓடவோ முடியாது என்பதால் உணவு பழக்கத்தை மாற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என்கிறார் சரத்குமார்.