நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு ஒளிபரப்பாவது குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. 






தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளில் ஒன்றாக அறிப்பட்ட நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி, சரத்குமார், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் திருமண புகைப்படங்களை அவ்வப்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். 






மேலும் திருமணத்திற்கு பிறகு தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற இந்த தம்பதியினர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இதனிடையே திருமண நிகழ்வை ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் ரூ.25 கோடிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.  அதன்பின் விக்னேஷ் சிவன் திருமண போட்டோக்களை வெளியிட்டதால் திருமண நிகழ்வை ஒளிபரப்பும் முடிவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைவிட்டதாக  தகவல் வெளியானது. 






இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின்  பயணம் பற்றிய ஆவணப்படம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு Nayanthara Beyond The Fairytale என பெயரிடப்பட்டது. இந்நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் நயனும், விக்கியும் தங்களது காதல் வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பேசியுள்ளனர்.