டிசம்பர் பிறந்தாச்சு! இந்த மாதம் பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில்  எக்கச்சக்கமான வெப் தொடர்களும் , படங்களும் ரிலீஸாக போகுது. அதுல பிரபலமான , மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களும் இடம்பிடித்திருக்கிறது. மறக்காம இந்த ஆர்டிகளை BOOKMARK பண்ணி வச்சுக்கோங்க! 



Money Heist:


மணி ஹைஸ்டிற்கான எதிர்பார்ப்பை நாங்கள் சொல்லவா வேண்டும்!  Money Heist season 5 “Volume 2”  நாளை (டிசம்பர்2) வெளியாகவுள்ளது. கொள்ளைக்கார கும்பலை ஹீரோக்களாக சித்தரித்து, அவர்களை கொண்டாட வைத்த பெருமை இயக்குநர்கள் Jesus Colmenar, Kolda Serra, Álex Rodrigo ஆகியவர்களையே சேரும்.  season 5 இன் முதல் பாகத்தில் கதையின் நாயகியாக கொண்டாடப்பட்ட டோக்கியோவின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. புரஃபஸரும் மாட்டிக்கொண்டார். யாருமே உயிழந்துவிட கூடாது என கொள்ளையை திட்டமிட்ட புரஃபசர் இனிமேல் என்ன செய்ய போகிறார் கொள்ளையடித்தார்களா? அல்லது கைவிட்டார்களா? புரஃபசரின் நிலை என்ன என்பதை நாளை மறக்காமல் பாருங்கள்!



Cobalt Blue



சச்சின் குண்டல்கரின்  LGTBQ நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் Cobalt Blue. இந்த திரைப்படம்  1990 ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த பாரம்பரிய மராத்தி குடும்பத்தை சகோதரனும் சகோதரியும் , தங்கள் தெருவில் வசிக்கும் ஒரே இளைஞனை காதலிக்கின்றனர். அவர்களின் முக்கோண காதல் கதையை எதார்த்தமாக ,  LGTBQ பிரிவு மக்களின் காதலை வலி கலந்த அழகியலோடு படமாக்கியிருக்கிறார் இயக்குநர் . படம் வருகிற  டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.



Minnal Murali


மலையாள சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம் . டொவினோ தமாஸின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது. மின்னல் முரளி என்னும் திரைப்படம் மலையாள சினிமா கணாத மாறுபட்ட ஃபேண்டஸி கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் தான் மின்னல் முரளியாகவே வாழ்ந்திருப்பதாக கூறியிருக்கிறார் டொவினோ தாமஸ். படம் வருகிற கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.




Decoupled


மாதவன் மற்றும் சுர்வின் சாவ்லா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். டி கப்புள்ட். படத்தை தேசிய விருது பெற்ற ஹர்திக் மேத்தா இயக்கியுள்ளார். ஹீரோ மற்றும் ஹீரோனுக்கு இடையேயான நவீன உறவுமுறை சிக்கல்கள் படமாக்கப்பட்டுள்ளது. படம் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகும்.



The Witcher


இதன் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் . தி விட்சர் தொடரின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகவுள்ளது. அரக்கர்களுடன் நடக்கும் போரில் நாயகன் எப்படி வெற்றி பெருவார் என்பதை சஸ்பென்ஸ் கலந்து படமாக்கியுள்ளனர் இயக்குநர்கள். இந்த வெப் தொடரின் இரண்டாவது சீசன் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


 



Don't Look Up


டார்க் காமெடியாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு நெட்ஃபிளிக்ஸ் கிட்டத்தட்ட 55 மில்லியன் செலவிட்டுள்ளதாம்.Leonardo DiCaprio, Jennifer Lawrence விஞ்ஞானிகளாக நடித்துள்ளனர். அவர்கள் இருவரும் பூமியை நோக்கி வர இருக்கும் மிகப்பெரிய வால் நட்சத்திரத்தை கண்டறிகின்றனர். அது பற்றிய சயின்ஸ் ஃபிக்ஸன் கலந்த காமெடி திரைப்படம்தான் டோண்ட் லுக் அப். இந்த படம் வருகிற  டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.




இதேபோல Cobra Kai என்னும் ஆக்‌ஷன் டிராமா திரைப்படம் டிசம்பர் 31 ஆம் தேதியும் ,Aranyak என்னும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட பாலிவுட் திரைப்படம் வருகிற டிசம்பர் 10 ஆம் தேதியும்  வெளியாகவுள்ளது. இன்று  The Power of the Dog என்னும் பல விருதுகளை வென்ற திரைப்படம் வெளியாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.