Netflix: சுதந்திர தின ஸ்பெஷல் திரைப்படங்களின் பட்டியல்... வெளியிட்ட நெட்பிளிஸ்  


நமது இந்தியா தனது 75 வது சுதந்திர தினத்தை நிறைவு செய்து ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று கோலகமலாக கொண்டாடுகிறது. இந்திய மக்கள் அனைவரும் நம் நாடு சுதந்திரம் அடைந்த நாளை தேசிய கொடியேற்றி வணங்கி கொண்டாடி வருகிறார்கள்.  


நமது நாட்டின் பாரம்பரியம்: 


இத்தனை ஆண்டுகளாக நமது நாடு பல உயர்வுகளையும், தாழ்வுகளையும், வீரர்களையும், மாவீரர்கள்களையும், போராட்டங்களையும், வெற்றிகள், தோல்விகளையும் சந்தித்துள்ளது. இவை அனைத்தை பற்றியும் நாம் கதைகள் மூலமாகவும், வயதில் மூத்தவர்கள் மூலமாகவும் சினிமா மூலமாகவும் தெரிந்துகொண்டுள்ளோம். 



OTT தளங்களின் முன்னேற்பாடு :


இன்றைய தலைமுறையினருக்கு நாம் நாட்டின் அருமையும் பெருமையும் மகான்களை பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது OTT தளங்கள். இதை தவிர வேறு எந்த சிறை வழியும் சிறப்பானதாக இருக்காது. இந்த சுதந்திர தினம் திங்கட்கிழமை வந்துள்ளதால் ஒரு நீண்ட வர இறுதியில் தொடர்ச்சியோடு இருப்பதால் OTT தளங்கள் மூலம் இந்து போன்ற தேச பக்தி படங்களை பார்க்க நேரம் இருக்கும் என்பதால் இந்த வாய்ப்பினை தவற விடாதீர்கள். 


75 இந்திய திரைப்படங்களின் பெயர்கள்: 


நமது நாட்டின் ரகசியம் நிறைந்த பணிகள், சமூக - அரசியல் இயக்கங்கள்  சார்ந்த கதைகள், போராட்டக்காரர்களின் விடாமுயற்சிகளை சித்தரிக்கும் ஏராளமான கதைகளை நமது இந்திய திரையுலகம் தந்து திரைப்படங்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. அந்த வகையில் 75வது சுதந்திர தினமான இன்று இந்தியாவின் சுதந்திரத்தை பறைசாற்றும் விதமான அழகான 75 இந்திய திரைப்படங்களின் பெயர்களை தொகுத்து வழங்கியுள்ளது OTT தளமான நெட்பிளிஸ். அந்த 75 படங்களின் பெயர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது நெட்பிளிஸ். அவை நம் தாய்நாட்டின் உணர்வையும், தேசபக்தியையும், அன்பையும் நமக்கு வெளிக்காட்டும் இப்படங்களை காண தவறாதீர்கள். நெட்பிளிஸ் தொகுத்து வழங்கியுள்ள இந்த படங்களின் பட்டியல் உள்ள ட்வீட் உங்களுக்காக: