2023 ஆம் ஆண்டு பல புதிய இயக்குநர்கள் சிறந்தப் படங்களை கொடுத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் டாப் 5 இயக்குநர்களின் பட்டியல் இது.
5. ஆதிக் ரவிச்சந்திரன்
ஆதிக் ரவிச்சந்திரன் இளைஞர்களை கவரும் வகையிலான படங்களை தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறார். த்ரிஷா இல்லனா நயன்தாரா வெற்றி பெற்றது என்றால் AAA , பகீரா போன்ற படங்கள் வந்த மாயம் தெரியாமல் மறைந்து போயின. சரியான நேரத்தில் மார்க் ஆண்டனி என்கிற படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் ஆதிக் . விஷால் , எஸ்.ஜே.சூரியா நடித்து வெளியான இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப் பட்டது மட்டுமில்லாமல் 100 கோடி வசூலும் ஈட்டியது. விஷால் நடித்து இவ்வளவு பெரிய வசூல் ஈட்டிய முதல் படம் இது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த பட்டியலில் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்
4. அ வினோத்
தமிழ் சினிமாவில் நம்பிக்கை அளிக்கும் இயக்குநர்கள் வெகு சிலரே. அப்படியான ஒரு படைப்பாளி அ வினோத். சிறிய பட்ஜட் படங்களை எடுக்கும்போது சிறப்பாக வெளிப்படும் அ வினோத் அவர்களின் படைப்பாற்றல் கமர்சியல் ரீதியாக பெரிய வெற்றிகளைக் கொடுக்க தடுமாறினதான். வலிமை படம் இதற்கு ஒரு உதாரணம் . ஒரு ஸ்டார் நடிகரை வைத்து இயக்கிய படம் தோல்வியடைந்தால் மனம் சோராமல் அடுத்ததாக துணிவு என்கிற படத்தின் மூலம் கம்பேக் அடித்த அ வினோத் இந்த வரிசையில் 4 ஆவது இடத்தை பிடித்துள்ளார்
3. மணிரத்னம்
தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம் . ஆனால் பட்ஜெட், பாக்ஸ் ஆஃபிஸ் , பான் இந்தியா என்று இந்திய சினிமா நகர்ந்துகொண்டிருக்கும் போது மணிரத்னம் கொஞ்சம் சவாலை எதிர்கொள்கிறார் தான். கடந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய பொன்னியின் செல்வன் முதல் பாகத்தைப் அதன் இரண்டாம் பாகம் வெற்றிகரமாக அமையவில்லை. பொன்னியின் செல்வன் 2 கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாகவும் பின் தங்கியது. இதனால் மணி ரத்னம் இந்த பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளார்
2. லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய படமாக அமைந்தது. ஆனால் விமர்சன ரீதியாக லியோ திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்ததன் காரணமாக இந்த ஆண்டு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார் லோகேஷ்.
1. நெல்சன் திலீப்குமார்
பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு சமூக வலைதளங்களில் எந்த அளவிற்கு நெல்சன் வசைபாடப் பட்டான் என்று நமக்கு தெரியும். தன்னை திட்டிய அனைவரையும் ஜெயிலர் படத்தின் மூலம் சைலண்டாக்கினா நெல்சன் திலிப்குமார். அவரது வெற்றியை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் கொண்டாடியது என்றால் மிகையல்ல.