வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலுடன் சேர்த்து அதே கிராமத்தில் உள்ள வழிக்கரையான் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் வழிக்கரையான் வேடமணிந்து வந்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான வழுவூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சிவபெருமான் வீர செயல்கள் புரிந்த இடங்கள் அட்டவீரட்ட தலங்களாக போற்றப்படுகிறது. தமிழகத்தில் எட்டு அட்ட வீரட்டேஸ்வரர் திருக்கோயில்கள் அமைந்துள்ளது.


Sani Vakra Nivarthi Palangal: சனி வக்கிர நிவர்த்தி - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை? தெரிஞ்சிக்கோங்க!




அவற்றில் ஒன்றுதான் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் கிராமத்தில் அமைந்துள்ள வீரட்டேஸ்வரர் ஆலயம் ஆகும். இந்த கோயில் சமய குறவர்களால் பாடல் பெற்ற 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த ஊர் பாலசாஸ்தாவான ஐயப்பனின் பிறந்த ஊர் எனக் கூறப்படும் நிலையில், ஐயப்பனின் பாதுகாவலரான வழிக்கரையான் என்கிற வீரபத்திர சுவாமிக்கும் இவ்வூரில் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் தற்போது சிதிலமடைந்த நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அவ்வூரில் உள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, பாலாலயம் செய்து, தற்போது, திருப்பணி நடைபெற்று வருகிறது.


5 Face Rudraksha: ஐந்து முக ருத்ராட்சம் அணிந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? முழு விவரம் இங்கே!




இந்த சூழலில் வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலுடன் சேர்த்து வழிக்கரையான் கோயிலுக்கும் திருப்பணிகள் செய்து இரண்டு கோயிலுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என போராட்டங்களை நடத்தி தொடர்ந்து இந்து மகா சபா வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராமநிரஞ்சன் தலைமையில் வழிக்கரையான் வேடமணிந்த ஒருவருடன் மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த அந்த அமைப்பினர், அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி பக்தி கோஷங்களை எழுப்பினர்.


Karungali Malai: கருங்காலி மாலையில் பயன்கள் இவ்வளவா? யார் அணியலாம்? அணியக் கூடாது? முழு விவரம்




தொடர்ந்து, மாநில தலைவர் ராமநிரஞ்சன் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கையை நிறைவேற்ற மனு அளித்து வலியுறுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நமது கோரிக்கையை ஏற்று இருகோயில்களுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்துவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். ஐயப்பன் பிறந்த பிறந்த ஊரான வழுவூரில் வரலாற்று சுவடுகளை ஆய்வு செய்து, வீரட்டேஸ்வரர், வழிக்கரையான் ஆகிய இரு கோயில்களிலும் விரைவில் திருப்பணியை முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்" என்றார்.


TNPSC: அரசு வேலை இனி கனவுதானா? டிஎன்பிஎஸ்சி மூலம் 2024-ல் வெறும் 3772 பேருக்கு வேலை? : ராமதாஸ் கேள்வி