Neeya Naana July 9 Episode: இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில், டிரெண்டியான தாத்தா பாட்டி மற்றும் இந்த தலைமுறை இளைஞர்கள் கலந்து கொண்டனர்.


நீயா? நானா?


பிக் பாஸ், அது இது எது, ஸ்டார் மியூசிக் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான “நீயா நானா”(Neeya Naana). சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை, சாதாரண மனிதர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, ஆராயும் நிகழ்ச்சிதான் நீயா நானா. 


வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பப்பராகும் இந்த ஷோவை கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை பலதரப்பட்ட தலைப்புகள் குறித்து பேசப்பட்டு வருகிறது.  அந்த வகையில், இந்த வாரம் ‘டிரெண்டியான தாத்தா பாட்டி மற்றும் இந்த தலைமுறை இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். 


’தக் லைஃப்' கொடுத்த கோபிநாத்


நீங்கள் எதையெல்லாம் டிரெண்டிங்னு சொல்லுறீங்க என்று டிரெண்டிங் தாத்தா பாட்டி குழுவிடன் கேள்வியை முன்வைத்தார் கோபிநாத். அதற்கு, நெட்பிளிக்ஸில் கொரியன் சீரிஸ் பார்ப்பது, ஒரு நாளைக்கு 30 அல்லது 40 செல்ஃபி எடுப்பது, Gym செல்வது, விதவிதமான உணவுகளை சாப்பிடுவது, மார்டன் ஆடைகளை அணிவது, கம்மல், நைல் பாலிஸில், ஜீன்ஸ், டி ஷர்ட் அணிவது போன்றவைகளை டிரெண்டிங் என்று கூறினர்.


இதனை தொடர்ந்து, ஒரு பெண், நைல் பாலிஸில் இருந்து, லிப்ஸ்டிக்கில் இருந்து, மேக்கப்பில் இருந்து, ஹேர் ஸ்டைல் மாறியது வரை எல்லாமே என்னுடைய மருமகள் தான். இதையெல்லாம் சென்னையில போட முடியவில்லை. அதனால இந்த மாதிரி ஃபங்ஷன் எல்லாம் வந்தேன்னா போடுவேன் என்று சொல்ல, அதைக் கேட்டு கோபிநாத் இது ஃபங்ஷனா...? என்று ’தக் லைஃப்' கொடுத்து பரவாயில நீயா நானாவை ஃபங்ஷன் ஃபீலிங்கில் வைத்திருக்கிறேன் என்று கேட்கும்போது சந்தோஷமாதான் இருக்கும் என்று பேசியிருக்கிறார். 


'ரோமாஞ்சம்' ரீல்ஸ் செய்த  தாத்தா பாட்டி


இதனை அடுத்து,  அறிமுக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான 'ரோமாஞ்சம்' படத்தில் வரும் பிரபல பாடலுக்கு நீயா நானா அரங்கத்தில் ட்ரெண்டி தாத்தா பாட்டில் தரப்பில் இருந்தவர்கள்  ரீல்ஸ் செய்தனர்.  இவர்கள் மட்டுமின்றி அரங்கத்தில் இருக்கும் அனைவரும் ரோமாஞ்சம் பாடலுக்கு வைப் செய்தனர். 






இதனால் அரங்கம் முழுவதும் ரோமாஞ்சம் vibe-க்கு சென்றது. மேலும், பாட்டி ஒருவர் கோபிநாத் உடன் நடனமாடி உள்ளார்.  இது சம்பந்தமான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 




மேலும் படிக்க 


LGM Trailer: ரசிகர்களே.. எல்.ஜி.எம். இசை மற்றும் ட்ரெயிலரை ரிலீஸ் செய்யும் தோனி, சாக்‌ஷி..! எப்போது, எங்கே?