தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்துத் தெரு நாய்களையும் எட்டு வார காலத்திற்குள் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தெரு நாய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இந்த தீர்ப்பை ஆதரித்தனர். மறுபக்கம் விலங்கு ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கின. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாய்களை பிடித்து அவற்றுக்கு கருத்தடை ஊசி செலுத்தியபின் பிடித்த இடத்திலேயே விட்டுவிடவும் மூர்க்கமான நாய்களை மட்டும் காப்பகத்தில் அடைக்கவும் தீர்ப்பு மாற்றப்பட்டது. இந்த பிரச்சனையையே இந்த வார நீயா நானா விவாதிக்க உள்ளது.
இந்த வார நீயா நானா ப்ரோமோ
வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானாவில் தெரு நாய்களை அகற்றுவது சரியானதா தவறானதா என்கிற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது. இதில் ஒருபக்கம் நாய்களை தங்கள் குழந்தைகளாக கருதும் தரப்பினர். இன்னொரு பக்கம் தெரு நாய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என அவரவர் தரப்பு நியாயங்களை முன்வைக்கிறார்கள். இரு தரப்பினர் இடையில் காரசாரமான விவாதம் நடைபெறும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் தெரு நாயால் தனது 6 வயது குழந்தையை இழந்த தந்தை பேசியிருப்பது பலரை கலங்கடித்துள்ளது