விஜய் சேதுபதி வெளியிட்ட  “ரைட்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் 

RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் படமான “ரைட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

நட்டி, அருண் பாண்டியன் கூட்டணியில் வெளியாகியிருக்கும் “ரைட்” படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Continues below advertisement

எளிய மக்களுக்கு பிரச்சனை என்றால் காவல்நிலையத்தில் உதவி கேட்பார்கள். அந்த காவல் நிலையத்திற்கே ஒரு பிரச்சனை என்றால் என்னவாகும்?, இது தான் இப்படத்தின் மையம்.

ஜில்லா புலி படங்களில் அசோஷியேட் இயக்குநராக பணிபுரிந்துள்ள சுப்ரமணியன் ரமேஷ்குமார் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பரபரப்பான சம்பவங்களை கோர்த்து, விறுவிறுப்பான திரைக்கதையில், அசத்தலான கமர்ஷியல் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

தமிழ் திரையுலகில் கால் பதித்திருக்கும் RTS Film Factory நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் நட்டி, அருண் பாண்டியன் இணைந்து, முதன்முறையாக முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், வில்லனாக ரோஷன் உதயகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வீரம் படப்புகழ் குழந்தை நட்சத்திரம் யுவினா பார்தவி இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார், அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் புதுமுகமாக அறிமுகாகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்தயாரிப்பு நிறுவனம் - RTS Film Factoryதயாரிப்பாளர்கள் - திருமால் லட்சுமணன், ஷியாமளாஎழுத்து, இயக்கம் - சுப்ரமணியன் ரமேஷ்குமார்இசை - குணா பாலசுப்ரமணியன்ஒளிப்பதிவு - M பத்மேஷ்எடிட்டிங் - நாகூரான் ராமசந்திரன்கலை - தாமுஸ்டண்ட் - மிராக்கிள் மைக்கேல்நடனம் - ராதிகாமக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)