நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. இந்த மாணவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

மாணவர்கள் போராட்டம்:

தி.நகரில் உள்ள கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் உள்ள பாலன் இல்லத்தில் மாணவர்கள் போராட்டம் ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் நடிகை சனம் ஷெட்டி பங்கேற்றார். அப்போது, அவரது பேச்சுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

போராட்டத்தில் பங்கேற்ற நடிகை சனம் ஷெட்டி கூறியிருப்பதாவது,

Continues below advertisement

நான் தளபதியோட ரசிகன்:

மாணவர்கள் போராட்டத்தில் மாணவர்களை ஆதரிப்பது என் கடமையாக நான் வந்திருக்கிறேன். இந்த ஒரு மேடையை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துபவர்கள்தான் கோமாளிகள். நாங்கள் கிடையாது. நான் தளபதியோட தீவிரமான ரசிகை. நேற்றுதான் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு வந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறும்போது அங்கே போராட்டத்தில் இருந்த மாணவர்கள் கூச்சலிட்டனர். அவர்கள் சனம் ஷெட்டிக்கு எதிராக குரல் எழுப்பினர். 

எனக்கு கவலையில்லை:

பின்னர் தொடர்ந்து பேசிய நடிகை சனம்ஷெட்டி, இது ஜனநாயகம் அல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் பேசுவதற்கு சுதந்திரம் உள்ளது. இப்போ புரியுதா? நான் எந்த அஜெண்டா பற்றி பேசுகிறேன். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. 

இவ்வாறு அவர் பேசினார்.

மைக் பறிப்பு:

அப்போது அவரிடம் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வந்து மாணவர்கள் எதிர்ப்பு குறித்து பேசும்போது, எனக்கு கவலையில்லைப்பா. நீங்க ஒரு தன்னிச்சையா மாணவர்கள் போராட்டம் நடத்தும்போது நான் மாணவர்களுக்காக மட்டும்தான் பேசுவேன். எவனும் சொல்லி நான் இங்க வரவில்லை. நானாக வந்துள்ளேன். 

இவ்வாறு அவர் பேசும்போது அங்கே வந்த மற்றொரு இளைஞர் சனம் ஷெட்டியிடம் இருந்து மைக்கை வாங்க முயற்சித்தார். அப்போது அங்கே வந்த மற்றொரு நபர் அவரிடம் இருந்து மைக்கைப் பறித்தார்.