சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டார் நீலிமா ராணி.தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமாகி, பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

Continues below advertisement


விஜய் டிவியின் அரண்மனைகிளி சீரியலில் நடித்து வந்த நீலிமா ராணி, தனிப்பட்ட காரணங்களால் அதிலிருந்து விலகினார். சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதை நிர்வகித்தும் வருகிறார்.


தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, இசைவாணன் என்பவரை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன், அவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அதிதி மகளும் இருக்கிறார்.






இந்நிலையில் தான் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருக்கும் விஷயத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் நீலிமா ராணி. இதைத் தொடர்ந்து தனது கர்ப்ப கால புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டார். அந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.


இரண்டாவது குழந்தைக்காக காத்திருந்த நீலிமாவுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறாள் இவ்விஷயத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண