Just In





NC22 Poster: வெங்கட் பிரபுவின் மாஸ்டர் ஸ்கெட்ச்..போலீஸ் அதிகாரியாக மிரட்டும் நாக சைதன்யா..பிறந்தநாளில் ஃபர்ஸ்ட்லுக்!
நாகசைதன்யா, வெங்கட்பிரபு இணைந்திருக்கும் NC22 படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் வெங்கட்பிரபுவின் ஆக்ஷன் த்ரில்லர் படமான 'NC22'-ல் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டி இந்தக் கதையில் கதாநாயகியாக நடிக்கிறார். பைலிங்குவல் கதையாக உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரவிந்த் சுவாமி, பிரியாமணி, சரத்குமார் மற்றும் ப்ரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
நாக சைதன்யாவின் பிறந்தநாள் நவம்பர் 23ம் தேதி வருவதையொட்டி, அதனைக்கொண்டாடும் விதமாக படக்குழு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் நவம்பர் 23 ஆம் தேதி காலை 10.18 மணிக்கு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். மாமனிதன் திரைப்படத்தை தொடர்ந்து இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இந்தப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வரும் இந்தப்படத்தின் பூஜை கடந்த ஜூன் மாதம் நடந்தது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், கதையின் மிக முக்கியமான ஆக்சன் காட்சிக்காக, பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு அதில் நடிகர்கள் அரவிந்த் சாமி, நாக சைதன்யா ஆகியோர் சம்பந்தமான ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டது. இது சம்பந்தமான ஆக்ஷன் காட்சியானது சண்டை இயக்குநர் மகேஷ் பாபு மாத்யூ மேற்பார்வையின் கீழ் படமாக்கப்பட்டது.
பிரபல ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தின் வசனங்களை அபூரி ரவி எழுதும் நிலையில், படத்தொகுப்பாளராக வெங்கட் ராஜன் கமிட் ஆகியிருக்கிறார். அதே போல சமந்தாவின் ஃபேமிலி மேன் 2 , யசோதா உள்ளிட்ட படங்களில் சண்டை இயக்குநராக பணியாற்றிய யானிக் பென்னும் இந்தப்படத்தில் மற்றொரு சண்டை இயக்குநராக பணியாற்றுகிறார். நாகசைதன்யாவின் படங்களிலேயே அதிக பொருட் செலவில் உருவாகி வருவதாக சொல்லப்படும் இந்தப்படத்தை பவன் குமார் வழங்க, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார்.