நடிகை சுருதிஹாசன் ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு விஜய், விஷால் உள்ளிட்ட  சில முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தற்போது தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கான வாய்ப்புகள் குறையவே அதிகமாக தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்தார். மார்கெட் உச்சத்தில் இருந்த சமயத்தில் சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் அவை சுருதிக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. தமிழில் இறுதியாக விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்திருந்தார். ஆனால் அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை.


தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக அறியப்படும் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கோபிசந்த் மாலினேனி  இயக்கும் புதிய படத்தில் நாயகனாக பாலகிருஷ்ணா நடிக்க , நாயகிகாக நடிக்கிறாராம் ஸ்ருதி.அந்த படம் பாலகிருஷ்ணாவின் 107 வது படமாக உருவாகி வருகிறது. தற்போது அந்த படத்தின் முதற்க்கட்ட வேலைகள் நடைப்பெற்று வருகிறது.கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் முன்னதாக வெளியான 'க்ராக்' என்ற படத்திலும்  ரவி தேஜாவிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




ஒரு காலத்தில் ரசிகர்கள் தங்களுக்கு பரீட்சியப்பட்ட நடிகைகள் திரையில் தோன்றினால்தான் அந்த படத்திற்கு முன்னுரிமை கொடுப்பார்கள். ஆனால் தற்போதைய சூழலில் கோலிவுட் ரசிகர்கள் தேர்வு முழுவது சிறந்த கதைகளின் பக்கம் படையெடுக்க தொடங்கியிருக்கிறது. இது ஆரோக்யமான விஷமாக பார்க்கப்பட்டாலும் சில நடிகைகளுக்கு இது சவாலான ஒன்றாகத்தான் இருக்கிறது. அப்படித்தான் ஸ்ருதிஹாசன்  சமீபத்தில் வெளியான படங்களில் கதைத்தேர்வுகளில் சொதப்பியிருக்கிறார் என ரசிகர்கள் கருதுகின்றனர். மீண்டும் நல்ல படங்களை தேர்வு செய்து கோலிவுட் பக்கம் சிறந்த கம் பேக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் ரசிகர்கள் விருப்பமாக உள்ளது.


 






ஸ்ருதிஹாசன் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல ஓவியரான  சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட  புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கூட ஸ்ருதிஹாசன் தனது காதலன் சாந்தனுவுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். ஸ்ருதிஹாசன் முன்னதாக  இத்தாலியை சேர்ந்த மைக்கல் கோர்ச்சல் என்பவரை காதலித்து வந்தார். அவர் லண்டலின் வசித்து வந்ததால் அவ்வப்போது அங்கும் விசிட் அடித்தார். பின்னர் மைக்கலை இந்தியாவிற்கு அழைத்து வந்து , தமிழர் கலாச்சாரங்களையும் கூட சொல்லிக்கொடுத்து, தனது தந்தை கமல்ஹாசனிடமும் கூட மைக்கேலை அறிமுகப்படுத்தினார். ஆனால் சில காலங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரேக் அப் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.