’க்யூட்' நாயகி நஸ்ரியா:
2013ஆம் ஆண்டில் வெளியான நேரம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நாயகி நஸ்ரியா. நாசர், ஜான் விஜய், தம்பி ராமைய்யா, நிவின் பாலி, உள்ளிட்ட நடிகர்களை வைத்து சிம்பிள் ஸ்டோரி லைனுடன் எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதில், ஹீரோயினாக அறிமுகமாகியிருந்த நஸ்ரியாவும், தனது முதல் படத்திலேயே பலரது மனங்களை கவர்ந்தார். அதுவரை நடிகை ஜெனிலியாவை க்ரஷாக வைத்திருந்த ரசிகர்கள், நஸ்ரியாவை தங்களது மொபைல் வால்பேப்பராக மாற்றத் தொடங்கினர்.
நேரம் படத்தை தொடர்ந்து, ராஜா ராணி படத்திலும், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நஸ்ரியாவிற்கு ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே போனது. இதையடுத்து, கோலிவுட்டின் முன்னனி ஹீரோவான, நடிகர் தனுஷ் உடன், நையாண்டி படத்தில் நடித்தார். தமிழில் மட்டுமன்றி, மலையாளத்திலும், பெங்களூர் டேஸ், ஓம் சாந்தி ஓசனா, ட்ரான்ஸ் ஆகிய படங்கள் மூலம் பலருக்கும் பழகிய முகமாக மாறி விட்டர் நஸ்ரியா.
தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்த நஸ்ரியா, திடீரென்று 2014ஆம் ஆண்டில் பகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு படங்களில் பெரிதாக தலை காட்டாமல் இருந்த அவர், நடிகர் நானிக்கு ஜோடியாக அண்டே சுந்தரலிங்கி என்ற தெலுங்கு படம் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுத்தார். இதனால், இவரது ரசிகர்கள் அனைவரும் உற்சாகமடைந்தனர்.
ஸ்கை டைவிங் செய்த நாயகி:
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நாயகிகளுள், நஸ்ரியாவும் ஒருவர். சமீபத்தில் துபாய் சென்றுள்ள இவர், ஸ்கை டைவிங் செய்துள்ளார். ஸ்கைடைவிங் என்பது, நடு வானில் இருந்து குதித்து, பின்பு பாராசூட் உதவியுடன் தரையிரங்கும் சாகசமாகும்.
தான் செய்த சாகசம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், “விமானத்திலிருந்து குதித்து துபாயில் இறங்கினேன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சாகசம் செய்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், கனவு நிஜமாகியது எனவும் தனது பதிவில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் நஸ்ரியா. இந்த பதிவு வைரலாகி வருகிறது. இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள், லைக்ஸ்களையும் கமெண்ட்ஸ்களையும் அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.