நடிகை நஸ்ரியா கடந்த மே மாதம் சமூக வலைதளங்களில் இருந்து குட்டி பிரேக் எடுப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்த நிலையில் மீண்டும் சோஷியல் மீடியாவிற்கு திரும்பி உள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று க்யூட்டான செல்பி ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 


welcome queen,உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி.. உள்ளிட்ட கமெண்டுகளை அவரிகளின் ரசிகர்கள் போட்டு வருகின்றனர். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு நஸ்ரியா பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகிறது. 






நேற்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஃபகத் பாசில்- நஸ்ரியா தம்பதியை சந்தித்தார். அப்போது அவர்கள் மூவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட குழு புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


நடிகை நஸ்ரியா ‘நேரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மலையாள நடிகையான இவர், ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேஸ் படம் மூலமாக க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்திய நஸ்ரியா அதன் மூலம் ஏராளமான ரசிகர்களையும் பெற்றார். 


பின்னர் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா இரண்டு மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் இருந்து சிறிய பிரேக் எடுப்பதாக தெரிவித்தார்.  இது தொடர்பாக அவர் பகிர்ந்த பதிவில் “நான் சமூக வலைதளங்களில் இருந்து சிறிய பிரேக் எடுக்கின்றேன். உங்களின் அன்பையும், மேசேஜ்களையும் மிஸ் பன்னுவேன். நிச்சயம் விரைவில் சோஷியல் மீடியாவிற்கு வருவேன்” இவ்வாறு பதிவிட்டிருந்தார். ஆனால் அவர் சோஷியல் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்ததற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.