தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகின் எவர் க்யூட் நடிகை என்றால் அது எந்த ஒரு சந்தேகமும் இன்றி நடிகை நஸ்ரியா நசீம் தான். தனது வசீகரிக்கும் அழகாலும், திறமையான நடிப்பாலும், அழகான சிரிப்பாலும் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றவர். இந்த க்யூட் நடிகை இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் :


குழந்தை நட்சத்திரமாக, நடிகர் மம்மூட்டியின் மகளாக 2006ம் ஆண்டு வெளியான 'பாலுங்கு' என்ற மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமானார். ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான மன்ச் ஸ்டார் சிங்கரின் தொகுப்பாளராக பிரபலமான நஸ்ரியாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. 


 



முன்னணி நடிகை அந்தஸ்து :


2013ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான 'Maad Dad' படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நஸ்ரியா, அதே வேளையில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழில் அதே ஆண்டு வெளியான 'நேரம்' திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை க்ளீன் போல்ட் செய்துவிட்டார். அதன் தொடர்ச்சியாக பெங்களூர் டேஸ், ராஜா ராணி உள்ளிட்ட வெற்றிப்படங்களில் மூலம் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். 


நஸ்ரியாவின் ரீ என்ட்ரி :


மிகவும் பிஸியான ஒரு நடிகையாக நடித்து வந்த நஸ்ரியா நசீம், 2014ம் ஆண்டு நடிகர்  ஃபஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி கொண்ட நஸ்ரியா, தற்போது மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகும் 'புறநானூறு' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 


நஸ்ரியாவின் சொத்து மதிப்பு :


திரைப்படங்களை காட்டிலும் பல முன்னணி பிராண்ட்களின் மாடலாகவும் இருந்து வருகிறார். ஒரு தொகுப்பாளினியாக தனது கரியரை துவங்கி இருந்தாலும் இன்று நஸ்ரியா தான் நடிக்கும் படங்களுக்கு 2 முதல் 4 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். 29 வயதான நஸ்ரியாவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகை நஸ்ரியா. அவரின் சொத்து மதிப்பு மட்டுமின்றி கணவரின் சொத்தையும் சேர்த்தால் இந்தக் கணக்கு பல கோடிகளை எட்டும்!


 



பிஸியான கணவர் :


நஸ்ரியாவின் கணவர் ஃபஹத் பாசிலும் மிகவும் பிஸியாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் பேக் டூ பேக் நடித்து வருகிறார். விக்ரம், மாமன்னன்,புஷ்பா உள்ளிட்ட படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அவரின் லெவல் மேலும் அதிகரித்துவிட்டது. அவரின் வருமானமும் சேர்ந்து நஸ்ரியா - ஃபஹத் பாசில் தம்பதியின் சொத்து மதிப்பு பல கோடிகளை தாண்டும் எனக் கூறப்படுகிறது.


சொகுசு கார் :


சமீபத்தில் கூட பச்சை நிற போர்ஷே காரை வாங்கி இருந்தார். ஆடம்பரமான இந்த சொகுசு காரின் மதிப்பு 1.80 கோடி.  ஃபஹத் பாசிலும் நஸ்ரியாவும் இணைந்து புதிய  காருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார் ஃபஹத் பாசில்.