Nayanthara : தி லெஜண்ட் படத்தில் நயன்தாராவை ஹீரோயின் ரோலுக்கு கேட்கவில்லை.. நடந்தது இதுதான்.. இயக்குநர்கள் விளக்கம்

லெஜெண்ட் சரவணன் அருள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லெஜெண்ட் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க அணுகப்பட்டார் நயன்தாரா என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

Continues below advertisement

 ஜேடி-ஜெர்ரி இணைந்து இயக்கி கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'லெஜெண்ட்'.  பிரபல தொழிலதிபரான லெஜண்ட் அருள் சரவணன் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஒரு முழு நீள ஆக்‌ஷன் என்டர்டெய்னர் திரைப்படமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான இப்படம் சற்று தாமதமாகவே கடந்த வாரம் தான் பிரபலமான ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. 

Continues below advertisement

 

லெஜெண்ட் படத்தில் நயன்தாரா :

லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்த இப்படத்தில் அவரின் ஜோடியாக நடித்திருந்தார் ஊர்வசி ரவுத்தேலா. இப்படம் தான் அவருக்கு தமிழில் முதல் படமாகும். இதனிடையே இப்படத்தில் நடிக்க முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை அணுகியது குறித்து இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி சமீபத்தில் நடைபெற்ற யூடியூப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளனர். மேலும் லெஜெண்ட் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரமாக அல்லாமல் வேறு ஒரு கேரக்டரில்  நடிப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 


ட்ரோல் செய்யப்பட்ட லெஜெண்ட் சரவணன் :

மேலும் லெஜெண்ட் படத்தில் நடித்ததற்காக லெஜெண்ட் அருள் சரவணன் குறித்து ஏராளமான ட்ரோல்கள் சோஸியல் மீடியாவில் பரவியது குறித்து இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி பேசுகையில், 50 வயதை கடந்த ஒருவர் தனது கடினமான உழைப்பால் விடாமுயற்சியுடன் நடித்திருந்தார் என தகுந்த பதிலடி கொடுத்தனர். மேலும் ஓடிடி தளத்தில் லெஜெண்ட் திரைப்படம் வெளியானதில் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதையும் தெரிவித்துக்கொண்டனர் ஜேடி - ஜெர்ரி.  


பாக்ஸ் ஆபிஸ் வசூல் :

உலக புகழ்பெற்ற விஞ்ஞானியாக ஆன்டிபயாடிக் துறையில் நீரிழிவு நோய்க்கு தீர்வு காணும் ஆராய்ச்சி செய்பவராக லெஜண்ட் சரவணன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்க பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுடேலா 20 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் ரோபோ ஷங்கர், சுமன், மயில்சாமி, யோகி பட்டு மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். லெஜெண்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சுமார் 45 கோடி வசூலித்தாக கூறப்படுகிறது. ஒரு அறிமுக நடிகரின் படத்திற்கு முதல் படத்தில் இவ்வளவு வசூல் செய்தது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.  

Continues below advertisement
Sponsored Links by Taboola