தமிழ் மற்றும் தெலுங்கு  சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பேமிலி மேன் 2’ வெப் சீரிஸிற்கு எந்த அளவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியதோ அதே அளவிற்கு சமந்தாவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டவும் செய்தனர். இந்நிலையில் அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில், வெப்சீரிஸில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான விருதை வழங்கி கவுரவித்தனர். அமேசான் பிரைமில் வெளியான ஃபேமிலி மேன் தொடரை ராஜ் மற்றும் டிகே இயக்கியிருந்தனர். இந்த  வெப் தொடரில் ஈழத்துப் போராளியாக நடிகை சமந்தா நடித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து நடிகை சம்ந்தா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் அதில் ”இந்த விருதை எனக்கு வழங்கியமைக்கு மிக்க நன்றி, என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகேவிற்கு இந்த சமயத்தில் நன்றியை  தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்,







இந்நிலையில் சமந்தாவிற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததை ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இது குறித்த புகைப்படத்தை சமந்தா தனது சமூக வலைத்தள பகிர்ந்துள்ளார் . அந்த புகைப்படத்தில் சமந்தாவுடன் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இது தவிர இந்த வாரத்தில் நிகழ்ந்த சிறந்த தருணங்களின் புகைப்பட தொகுப்பையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைத்துள்ளார். அதற்கு கேப்ஷனாக “ இந்த வாரம் “ என ஹார்ட் எமோஜி கொடுத்துள்ளார். நிச்சயமாக இந்த வாரம் சமந்தாவிற்கு சிறந்த வாரமாக அமைந்தது என்பதில் சந்தேகமே இல்லை.





சமந்தா தற்போது தெலுங்கில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘சாகுந்தலம்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் காளிதாசர் எழுதிய நூலின் அடிப்படையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது முழு வீச்சில் காத்து வாக்குல ரெண்டு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஏற்கனவே சென்னை , ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில், தற்போது பாண்டிச்சேரியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.10 நட்களில் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர். ப கொரோனா ஊரடங்கு காரணமாக , நடிகர்கள் ஒதுக்கிய கால்ஷீட்டில் நடிக்க  முடியாமல் போனது. இதனால் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் படத்தை விரைந்து முடித்து, இந்த வருட இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழு.