கோலிவுட் சூப்பர் ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இன்று (ஜூன் 9) மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் செய்துள்ளனர்.  நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. 




திருப்பதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், திருமண மண்டபத்தை நேரில் சென்று பார்த்து வந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் இன்று நடக்கிறது. நானும் ரவுடி தான் மூலம் காதல் வயப்பட்ட இருவரும் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். 


இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்தார். திருமணத்திற்கு பிறகு வருகிற ஜூன் 11-ந் தேதி நயன்தாரா உடன் வந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாகவும் விக்னேஷ் சிவன் கூறி இருந்தார்.
திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள், திரைபிரபலங்களை அழைத்துள்ள விக்கி -நயன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.




இந்நிலையில், விக்னேஷ் சிவனின் பெரியப்பா திருமண வாழ்த்தை தொலைக்காட்சியின் மூலம் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்றும் இருப்பினும் அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என வாழ்த்து கூற விரும்புவதாகவும் கூறியுள்ளார். திரைப்பிரபலங்கள் அனைவருக்கும்  அழைப்பு விடுத்த நிலையில், சொந்த பெரியப்பாவுக்கு அழைப்பு விடுக்காதது பேசுபொருளாக மாறியுள்ளது.


இதன் காரணமாக, பெரியப்பாவுக்கு அழைப்பு விடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனாலேயே அவரது குடும்பத்தார், விக்னேஷ் சிவன் திருமணத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. பிரபலங்களும், முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொள்ள இருப்பதால், திருமணம் நடக்கும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, அழைப்பிதழ் இருந்தால் மட்டும் இந்த திருமணத்தில் நுழைய முடியாது என கூறப்படுகிறது. மேலும், திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் ஒரு கோட் அனுப்பி வைக்கப்படும். அந்த கோடை காண்பித்தால் தான் திருமணம் நடைபெறும் இடத்திற்கு நுழைய முடியுமாம்.




திருமணம் முடிந்து இருவரும் வெளிநாட்டுக்கு ஹனிமூன் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கையில் டஜன் படங்கள் வேலையில் இருப்பதால் உடனடியாக நயன்தாரா ஷூட்டிங்கில் பங்கேற்பார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் காட்ஃபாதர், இந்தியில் ஷாருக்கான் உடன் ஜவான், ஆகிய படங்களில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவர் நடித்துள்ள ஓ2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண