நடிகர் நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பங்கேற்க முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான், நடிகர்கள் சூர்யா, விஜய்சேதுபதி, சரத்குமார், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
மாமல்லபுரத்தில் நயன்தாரா திருமணம் நடைபெற்ற தனியார் நட்சத்திர விடுதியை நரிக்குறவர்கள் சூழ்ந்தனர். அவர்கள் நடிகர் அஜீத்தை பார்த்துவிட்டுதான் செல்வோம் என்று கூறி அங்கேயே காத்துள்ளனர். மேலும், நடிகர் ரஜினிகாந்தையும் பார்த்துவிட்டு செல்வோம் என்றும் நரிக்குறவர்கள் கூறி காத்து வருகின்றனர். குறிப்பாக, நரிக்குறவ சிறுவன் ஒருவன் அஜீத்தை மட்டும் பார்த்துவிட்டு செல்லாம் என்று அவனது குடும்பத்தினரிடம் அடம்பிடிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆனால், நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே திருமணத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிவிட்டார்.
ஆனாலும், நரிக்குறவர்கள் தாங்கள் நயன்தாராவை பார்க்காவிட்டாலும் நடிகர் அஜீத்தை பார்த்துவிட்டுதான் செல்வோம் என்று கூறி காத்துக்கொண்டு உள்ளனர். நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு காலை முதல் பிரபல நடிகர்கள் மாமல்லபுரத்திற்கு படையெடுத்து வருவதால் அந்த பகுதியில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
திருமண நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் அஜீத்தை காணவில்லை என்று திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர் கூறியிருந்தார். ஆனால், திரைப்பிரபலங்களான நடிகர் அஜீத் மற்றும் விஜய் சற்றுமுன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நரிக்குறவர்கள் தாங்கள் ஆசைப்பட்டது போலவே நடிகர்கள் அஜீத் மற்றும் விஜய்யை நேரில் பார்த்து தங்களது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : Nayanthara Vignesh Shivan Marriage LIVE: நயனுக்கும் - சிவனுக்கும் இன்று டும் டும்...! வாழ்த்து மழையை கொட்டும் ரசிகர்கள்...!
மேலும் படிக்க : நோ ஹனிமூன்..உடனே ஷூட்டிங்தான்! - நயன் - சிவன் திருமண அப்டேட்ஸ்
மேலும் படிக்க : Nayanthara Vignesh Shivan Marriage LIVE: நயன்தாரா - விக்னேஷ் சிவன் மணமகிழ் விழா!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்