தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் விக்னேஷ்சிவனுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், விக்னேஷ்சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக பதிவிட்டார்.
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்த இந்த செய்தி அமைந்தது. அதே சமயத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதற்கு பலர் வாழ்த்து தெரிவித்தபோதும், சிலர் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, அவர் கூறியதாவது, “ வாடகைத் தாய் என்பது விதிகளுக்கு உட்பட்டதா? அல்லது விதிகளுக்கு அப்பாற்பட்டதா? என்று விவாததிற்குரிய ஒன்றாக உள்ளது. ஏற்கனவே கருமுட்டை விவகாரத்தில் ஏற்கனவே பல சிக்கல்கள் உள்ளது. ஆனாலும், விதிகளின் படி 21 வயதை கடந்தவர்கள் 36 வயதை கடந்தவர்கள் கருமுட்டைகளை பெறலாம். குறிப்பாக, பெற்றோர்கள் மற்றும் தம்பதிகள் ஒப்புதல் பெற்று தரலாம் என்று உள்ளது. அந்த வகையில் இது சாத்தியமாயிருக்கலாம்” என்று கூறினார்.
அப்போது, திருமணம் ஆகி 2 மாதங்கள்தானே ஆகியிருக்கிறது என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு விதிகளின்படிதான் இது நடந்ததா? என்று பரிசீலிக்கப்படும்” என்று கூறினார்.