லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சூப்பர் திருமண ப்ரேக்கிங் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இயக்குனர் விக்னேஷ் சிவன் உடனான காதல், கல்யாணமாக மாறி பின், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என ஒரு ரவுண்ட் வந்த நயன்-சிவன் ஜோடி, ஒரு வழியாக உள்ளூர் சம்பிரதாயங்களை முடித்து, ஹனிமூனுக்கு பறந்தது.
எங்க போகிறார்கள், எத்தனை நாள் இருக்கப் போகிறார்கள் என்கிற கேள்வியெல்லாம் ஒருபுறம் இருக்க, சத்தமில்லாமல் இருந்த விக்னேஷ் சிவன், சற்று நேரத்திற்கு முன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தாய்லாந்தின் பாங்காங் நகரில் தன் மனைவி நயன்தாராவுடன் குதூகலிக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திசியாம் என்கிற ஓட்டலில் தங்கியுள்ள நயன்-சிவன் ஜோடி, அங்கு தங்களது ஹனிமூனை சிறப்பாக கடத்தி வருகிறது. இதில் விசேஷம் என்னவென்றால், திருமணத்தன்று பவளம், முத்துக்கள் என கழுத்து கொள்ள நகைகளை அணிந்திருந்த நயன்தாரா, ஹனிமூனில் எந்த நகையும் அணியாமல், வெறும் கழுத்தில் காட்சியளிக்கிறார். அத்தனை நகைகளை கழற்றினாலும், விக்னேஷ் சிவன் கட்டிய அந்த மஞ்சள் தாலியை மட்டும் அவர் அணிந்திருப்பது, தாலி மீது நயன்தாராவுக்கு இருக்கும் மரியாதையை காட்டுவதாக, அவரது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
தங்கத்தாலான தாலியை அணிவதையும், அல்லது மஞ்சள் கயிறு தாலி அணிந்த பின் அந்த தங்க சங்கிலியில் கோர்ப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், கழுத்து நிறைய மஞ்சள் மாங்கல்யம் அணிந்து, வெளிநாட்டில் வெளிப்படையாக உலா வரும் நயன்தாராவை பலரும் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். ‛சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா...’ என்கிற ராமராஜன் பாடல் போல, தாய்லாந்தை வலம் வரும் விக்கி-நயன் ஜோடி, இன்னும் சில நாடுகளுக்கு நகர்ந்து, தங்கள் ஹனிமூனை கடத்துவார்கள் என்றே தெரிகிறது.