விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் உணவு சாப்பிடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நல்ல சாப்பிட வேண்டிய நேரம்
இது குறித்து விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”இது நன்றாக சாப்பிட வேண்டிய நேரம். கடல் சார்ந்த உணவுகளுக்கு இந்தக்கடைதான் என்னுடைய சாய்ஸ். அவளுக்கு இங்கு உணவை ஊட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சுவையான உணவு மற்றும் அற்புதமான மனிதர்களை கொண்ட இந்த நல்ல வீடுகள் மட்டுமே நாங்கள் சாப்பிட விரும்பும் இடங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
‘போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். இந்தப்படத்தின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதனைத்தொடர்ந்து பல விருது நிகழ்ச்சிகளில் ஒன்றாக வலம் வந்த இந்த ஜோடி, அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் விக்கியின் இன்ஸ்டா பக்கத்திலும் இடம் பெறும்.
தொழிலும் ஒன்றாக பயணம் செய்த இவர்கள் ‘ரெளடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் இவர்கள் தயாரித்த ‘ராக்கி’ ‘கூலாங்கல்’ உள்ளிட்ட படங்கள் கவனம் பெற்றன. பொதுவாக வெளியே அதிகம் தென்படாத நயன்தாரா விக்னேஷ் சிவனுடனான காதலுக்கு பிறகு, பல கோயில்களுக்கு சென்று சாமி செய்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் இருவரும் பாபநாசத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு இருவரும் சென்று சாமி தரிசனம் செய்தனர். அண்மையில் நயன்தாரா சமந்தா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியிருந்த விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.