ஸ்பெயினின் பிரபல நினைவுச் சின்னத்தின் முன்பு காதல் ததும்பும் புகைப்படம் எடுத்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி பகிர்ந்துள்ள தங்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.


ஸ்பானிய கட்டடக் கலைஞர் அன்டோனி கௌடி என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஸ்பெயினின் முக்கிய நினைவுச் சின்னங்களில் ஒன்று ‘லா சாக்ரடா ஃபேமிலியா.’


இந்த நினைவுச் சின்னத்தின் முன்பு நயன்தாராவுக்கு நெற்றி முத்தமிட்டு காதலை வெளிப்படுத்தும் புகைப்படத்தை முன்னதாக விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


 






மேலும், முன்னதாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி ஸ்பெயினில் இருந்தபடி சுதந்திர தினம் கொண்டாடி புகைப்படங்கள் பகிர்ந்து நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளனர்.


ஸ்பெயினில் இருந்தபடி சுதந்திரதினத்தைக் கொண்டாடியும், இந்தியக் கொடியை ஸ்பெயினில் உயர்த்தி ஏந்தியபடியும் விக்கி - நயன் ஜோடி பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.


 






தங்கள் ஹனிமூன் ட்ரிப்புக்கு அடுத்தபடியாக வெளிநாடு சென்று வெக்கேஷனை செலவிட உள்ளதாகக் கூறி பார்சிலோனா சென்ற நயன் - விக்கி ஜோடி விமானத்தில் பறந்தபடி தங்கள் புகைப்படங்களைப் பகிர்ந்து ட்ரெண்ட் செய்தனர்.


இந்நிலையில் அங்கிருந்து தற்போது ஸ்பெயின் வந்துள்ள இந்த ஜோடி, அங்கு சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.