கோலிவுட்டின் க்யூட் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், சாலையோர மக்களுக்கு பரிசளித்துள்ளனர்.


தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் 02, கோல்ட், கனெக்ட் ஆகிய படங்கள் வெளியானது. இதில், 02 படம் பெரிதாக பேசப்படாத நிலையில், கோல்ட் படம் ப்ளாப் ஆனது. மீதம் இருக்கும் கனெக்ட் எனும் பேய் படம் மட்டும் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.


நயனும் விக்கியும் 


நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி ''நானும் ரௌடி தான்'' திரைப்படம் மூலம் அறிமுகமாகினர். அப்போதே இருவரும் காதல் வயப்பட்டனர். காதல் மட்டும் அல்ல அந்த திரைப்படமும் மெகா ஹிட் ஆனது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஆறு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் எப்போது என்ற நிலையான கேள்வி கோலிவுட் வட்டாரங்களில் எழுந்த வண்ணம் இருந்தது. அந்த கேள்விக்கு விடையளிக்கும் விதமாக ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 


கடந்த அக்டோபர் மாதம் தாங்கள் இருவரும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிவிட்டதாக அறிவித்திருந்தனர். இந்த செய்தி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர் வாடகை தாய் முறை மூலமாக குழந்தை பெற்றெடுத்தாக தகவல் வெளியானது. அதன் பின், அந்த குழந்தைகளின் புகைப்படத்தை அடிக்கடி வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.






தற்போது இந்த ஜோடி, புத்தாண்டு பண்டிகையையொட்டி சென்னை எக்மோரில் இருக்கும் சாலையோர மக்களுக்கு பரிசுகளை கொடுத்துள்ளனர். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதற்கு முன் ஜூன் மாதம் நடந்த இவர்களின் திருமண நிகழ்ச்சியையொட்டி, பல முதியோர்களுக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் உணவு அளித்து உதவி செய்தனர். இவர்களின் இந்த செயலை நெட்டிசன்களும், பொது மக்களும் பாராட்டி வருகின்றனர்.


மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil : பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேரடி இறுதி போட்டியாளராகப்போகும் அந்த நபர் யார்?