நயன்தாரா
கோலிவுட்டின் ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்படும் ஜோடிகளில் ஒன்று விக்னேஷ் சிவன் நயன்தாரா . இருவரும் ஒரு பக்கம் நடிப்பு இயக்கம் என பிஸியாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கைக்கும் சம அளவிலான நேரத்தை ஒதுக்கி வருகிறார்கள். உயிர் உலகு என இரு மகன்களுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது இன்ஸ்டாகிராமில் வீடியோ , ஃபோட்டோஸ் வெளியிடுவது என பயங்கர அக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தனது இரு மகன்களோடு தீபாவளி கொண்டாடிய வீடியோவை நடிகை நயன்தாரா பதிவிட்டுள்ளார்
பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து நயன்தாரா
நடிகை நயன்தாரா சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து பேசியது ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் ஈர்த்தது. "
"எந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போதும் என்னுடைய புருவத்தை அழகுபடுத்திக் கொள்வது என்னுடைய வழக்கம். என்னுடைய புருவத்தை நிறைய மாதிரி நான் அழகுபடுத்தி இருக்கிறேன். அதனால் தான் மக்கள் என் முகத்தை நான் ஏதோ செய்துவிட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. இது வெறும் டயட் தான். என்னுடைய உடல் எடையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன். அதே நேரம் என்னுடைய் கன்னங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. என் கன்னத்தை கிள்ளியும் பார்க்கலாம், எரித்தும் பார்க்கலாம்" என நயன்தாரா பதிலடி தெரிவித்துள்ளார். "