தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்து எடுத்து நடித்து வரும் நயன்தாரா பேக் டு பேக் வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். 


பாலிவுட்டில் அறிமுகம் : 


தென்னிந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய நயன்தாரா தனது காலடி தடத்தை 'ஜவான்' திரைப்படம் மூலம் பாலிவுட்டிலும் பதித்து உள்ளார். அட்லீ இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஜோடியாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி, பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன் வசமாக்கிய நயன்தாரா முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து விட்டார். 


 



அருமையான ஓப்பனிங் :


அட்லீ ஒரு இயக்குநராக பாலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளார். விமர்சன ரீதியாக பாசிட்டிவ் கருத்துக்களை பெற்ற ஜவான் திரைப்படம் வசூலிலும் சக்கை போடு போட்டு 1100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அட்லீ மற்றும் நயன்தாரா இருவருக்குமே ஜவான் திரைப்படம் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த அசத்தலான வெற்றிக்கு பிறகு நயன்தாராவுக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 


கிளாசிக் படத்தின் ரீ மேக் :


இந்தியாவின் மிக சிறந்த இயக்குனர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி தேவதாஸ், சாவரியா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட சூப்பர் ஹிட் வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக அவரின் இயக்கத்தில் வெளியான கங்குபாய் கத்தியவாடி திரைப்படம் மூன்று பிரிவுகளின் கீழ் தேசிய விருதை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் அவர் அடுத்ததாக ரன்வீர் சிங் - ஆலியா பட் நடிப்பில் ’பைஜு பாவ்ரா’ என்ற புதிய இந்தி படத்தை இயக்கி வருகிறார். இது 1952ம் ஆண்டு வெளியான கிளாசிக் படமான ’பைஜு பாவ்ரா’ படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. அப்படத்தில் நடிகை நயன்தாராவை ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.


 



நயன்தாராவுக்கு அடுத்த வாய்ப்பு :
 
சஞ்சய் லீலா பன்சாலி திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அந்த வகையில் தற்போது அதில் நயன்தாராவும் இணைய உள்ளார் என்ற இந்த தகவலுக்கு பிறகு அப்படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்காக எகிறியுள்ளது. பாலிவுட் திரையுலகிலும் நயன்தாராவுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பதை இந்த வாய்ப்பு குறிக்கிறது. மேலும் அவர் அடுத்து நடிக்கப்போகும் படம் குறித்த தகவல் அறிய மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் அவரது தீவிர ரசிகர்கள்.