இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் ஒடிடி வெளியீட்டிற்கு தயாராக உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’ . இந்த திரைப்படத்தை ‘ அவள்’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார் . இந்த திரைப்படத்தில்  நயன்தாரா பார்வை குறைபாடு உள்ளவராக நடித்திருப்பதாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பிரபல ஹாட் ஸ்டார்  நிறுவனம் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. மிரட்டும் த்ரில்லர் படமாக  எடுக்கப்பட்டுள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் அப்டேட்  குறித்து தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனிடம் ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பிவந்த நிலையில் படத்தின் டிரைலரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 






சரியாக நண்பகல் 12 .15 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த டிரைலர் மிரட்டும் காட்சிகளை கொண்டுள்ளது. நிச்சயம் நெற்றிக்கண் திரைப்படம் நயனதாரா ரசிகர்களுக்கு டிரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. நெற்றிக்கண் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 13 அன்று  ஒடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. முன்னதாக படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை காரணமாக அந்த முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டன.


ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் திரைப்படத்திற்கும் ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுப்பதால், இந்த படத்தை ஒடிடியில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. படத்தில் நயன்தாராவுடன்  அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கான திகில் இசையை கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்து கொடுத்துள்ளார்.




நயன்தாராவின் நெற்றிக்கண் படம் தவிர்த்து , ரஜினியுடன் அண்ணாத்த , விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களும் கிட்டத்தட்ட வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. நயன்தாரா அறிமுக இயக்குநர் விக்னேஷ் என்பவரது இயக்கத்தில் தற்போது ஹாரர் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .விக்னேஷ் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் . பெயர் வைக்கப்படாத அந்த படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கி உள்ளது.  இந்த படத்தின் ஷூட்டிங்கை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஃபேமிலி என்டேர்டைன்மெண்டோடு திகிலாக இந்த படம் உருவாகி வருகிறது. நயன்தாரா ஏற்கனவே மாயா, ஐரா, டோரா உள்ளிட்ட திகில் படங்களில் நடித்துள்ளார்.


மாயா படத்தில் பேயாகவும் நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜமௌலி இயக்கும் பாகுபலி தி பிகினிங் என்ற படத்தில் ‘சிவகாம தேவியாக’ நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. அதே போல  அட்லீ “ஷாருக்கானை’ வைத்து இயக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம் நயன்தாரா. நயன்தாராவின் நடிப்பில்  வெளியாகும் அடுத்தடுத்த படங்களின் வெளியீட்டு தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.