'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் மூன்றாவது பாடலான 'நான் பிழை’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை நயன் - விக்னேஷ் ஆகியோரின் “ரௌடி பிக்சர்ஸ்” நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. ‘நான் பிழை’ என்ற வரிகளுடன் வீடியோ பாடல் தொடங்குகிறது.
விக்னேஷ் சிவன் எழுதிய இந்தப் பாடலை ரவி ஜி மற்றும் சாஷா திருப்பதி ஆகியோர் பாடியுள்ளனர். அழகிய மெலேடியாக இருக்கும் பாடலில், விஜய் சேதுபதியும், நயன்தாராவும் கண்களிலே காதல் செய்கின்றனர். ரசிகர்களுக்கு பாடலும் பிடித்துள்ளதால் பாடலும் வைரலாகி வருகிறது. முன்னதாக, 'காதல் ஒன்றாகி வந்து ரெண்டானதே, ‘டூ டூ டூ, பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்தப் பாடலின் டீசரை நயன்தாரா நேற்று வெளியிட்டிருந்தார். அதில் இருந்தே பாடலின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதனை தற்போது நிறைவேற்றியும் உள்ளது.
முன்னதாக இந்த திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஶ்ரீசாந்த் நடித்ததாக தகவல் வெளியானது. அந்த தகவலும் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் ஹர்பஜன் சிங், பிராவோ உள்ளிட்டோரும் திரையில் தோன்றியுள்ளனர். இந்தப் படத்தில் ஸ்ரீசாந்த் நடிப்பதன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் நான்காவது கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்