2015ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் ஹாரரான ’மாயா’ படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் 'கனெக்ட்'. மாயா திரைப்படத்தை போன்றே இதுவும் ஒரு வுமன் சென்ட்ரிக் திரைப்படமாக அமைந்துள்ளது.
தி நகரில் பிரீமியர் ஷோ :
நாளை மறுநாள் (டிச.22) இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், நேற்று சென்னை, தி நகரில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்கில் இந்த படம் தொடர்பான பிரீமியர் ஷோ நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நயன்தாராவும் அவரது கணவரான விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டனர்.
ரசிகைகளுக்கு ஆட்டோகிராஃப் :
அங்கு இந்த கியூட் ஜோடிகளை காண்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. திரளாக திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து கையசைத்து அவர்களின் அன்பை பெற்றுக்கொண்டார் நயன்தாரா. ரசிகர்கள் மட்டுமின்றி ரசிகைகளும் அங்கே ஏராளமானோர் நயன்தாராவை காண்பதற்காக கூடியிருந்தனர். நயன்தாராவும் ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்து போட்டோ எடுத்துக்கொண்டு அவர்களை சந்தோஷப்படுத்தினார்.
விக்னேஷ் சிவனின் ஆசிரியை :
மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் அந்த ரசிகர்களின் கூட்டத்தில் இருந்த ஒருவர் விக்னேஷ் சிவனின் ஆசிரியை ஆவார். அவரை விக்னேஷ் சிவன் நயனிடம் 'இவங்க என்னுடைய டீச்சர்' என அறிமுகப்படுத்தி வைத்தார். அங்கு இருந்த ரசிகைகள் அனைவரும் கத்தி கூச்சலிட்டு அவர்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.