நடிகை நயன்தாரா குறித்து காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் கரண் ஜோகர் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான கரண் ஜோஹர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தங்கள் மனம் திறந்த பதில்களை அளிப்பதால் இதனை ரசிகர்கள் பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர். சமீபத்தில் இதன் 7வது சீசன் தொடங்கியது. இதில் ஆலியா பட் - ரன்பீர், சாரா அலி கான், ஜான்வி கபூர் ஆகியோர் பங்கேற்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சர்ச்சையாகும் அளவிற்கு பதிலளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அக்ஷய் குமாரும், நடிகை சமந்தாவும் பங்கேற்றனர். அப்போது சமந்தாவிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கரண் ஜோகர், தென்னிந்திய திரைப்படத் துறையில் யார் பிரபலமான நடிகை என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு சமந்தா, சற்றும் யோசிக்காமல் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை குறிப்பிட்டு நான் நயன்தாராவுடன் ஒரு படம் செய்தேன். தென்னிந்தியாவில் அவர் தான் மிகப்பெரிய நடிகை என தான் நினைப்பதாக கூறினார். அதற்கு கரண் ஜோகர், அவர் என் லிஸ்டில் இல்லை என கூறினார். இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
மேலும் அவருடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்த போது சூப்பராக இருந்தது. என்னுடைய எல்லா நேர்காணல்களிலும் நயனுடன் இணைந்து நடித்தது பற்றி கேட்கிறார்கள். அதை உண்மையிலேயே அற்புதமான தருணமாக உணர்கிறேன். ஷூட்டிங்கின் கடைசி நாளில் கூட நாங்கள் இருவரும் கட்டியணைத்து அழுதோம் என சமந்தா தெரிவித்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சம அளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் சமந்தாவே எந்தவித ஈகோவும் இல்லாமல் நயன்தாராவைப் பற்றி பெருமையாக தெரிவிக்கிறார். ஆனால் கரண் ஜோகரோ ஏன் தென்னிந்தியத் திரையுலகைப் பார்த்து எப்போதும் பொறாமைப்படுகிறார்? என சரமாரியாக விமர்சித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்