இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நாளை முன்னிட்டு நடிகர் அஜித் அவருக்கு அட்வைஸ் ஒன்றை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
சிலம்பரசன் நடித்த ‘போடா போடி’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமானாவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இந்தப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். சினிமாவில் மட்டுமல்லாது வாழ்கையிலும் அவருக்கு அந்தப்படம் திருப்புமுனையாக அமைந்தது.
ஆம் அந்தப்படத்தில் தான் அவருக்கும், நயன் தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதனைத்தொடர்ந்து சூர்யா நடித்த ‘ தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கினார். இந்தப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், ஓடிடியில் வெளியான பாவக்கதைகள் சீரிஸில் ஒரு பாகத்தை இயக்கியிருந்தார். அதனைத்தொடர்ந்து விஜய்சேதுபதி,நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கினார்.
இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விக்னேஷ் சிவனை பொருத்தவரை அவர் இயக்கிய படங்களை மூலம் அறியப்பட்டதை விட, நயன்தாராவின் காதலர் என்று அறியப்பட்டதே அதிகம். நயன்தாராவுடன் அவர் நெருங்கி இருக்கும் புகைப்படங்கள், ட்ராவல் செய்த புகைப்படங்கள் என பலவற்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டு வந்த விக்னேஷூக்கு காலப்போக்கில் நிறைய ரசிகர்கள் உருவாகினர். இந்த நிலையில் நயனுடனான கல்யாண அறிவிப்பை வெளியிட்ட அவர், கடந்த ஜூன் 9 ஆம் தேதி அவரை கல்யாணம் செய்து கொண்டார்.
இதற்கிடையே அவர் அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்க இருக்கிறார் என்ற அறிவிப்பும் வெளியானது. இதன் மூலம் அஜித்திடம் நெருங்கி பழக கூடிய வாய்ப்பை பெற்ற விக்னேஷ் சிவன் அஜித் தனக்கு கொடுத்த அட்வைஸ் ஒன்றை ஷேர் செய்திருக்கிறார்.
அஜித் கொடுத்த அட்வைஸ்
அந்த அட்வைஸ் குறித்து அவர் பேசும் போது, “அஜித் சார் எப்போதுமே சொல்லுறது. நம்ம ப்ராசஸ்ச என்ஜாய் பண்ணனும். நம்ம செய்ற வேலைய நம்ம ரொம்ப என்ஜாய் பண்ணி, நம்மள சுற்றி இருக்குறவங்களும் அந்த வேலையை ரொம்ப நேர்மையா என்ஜாய் பண்ணினாலே அந்த வேலை நிச்சயமா வெற்றியை நோக்கிதான் போகும். நம்ம கூட வேலை செய்றவங்க எப்போதுமே சந்தோஷமா இருக்கணும், அங்க இருக்குற ஜூனியர் ஆர்டிஸ்ட் கூட இது என்னோட படம், என்னோட வேலை அப்படின்னு நினைச்சிட்டாலே அதனுடைய ரிசல்ட் வெற்றியாதான் இருக்கும்னு அஜித் சார் சொல்லுவார்” என்று பேசினார்.