தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகையும், லேடி சூப்பர் ஸ்டாருமாகிய நயன்தாராவின் கனெக்ட் படத்தின் ரிலீ்ஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அஸ்வின் சரவனன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் தயாராகியுள்ள படம் கனெக்ட். விக்னேஷ் சிவனுடனான திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா வரிசைகட்டி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் 2015-ஆம் ஆண்டு தன் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் ஹாரரான ’மாயா’ படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் உடன் மீண்டும் கைக்கோர்த்துள்ளார் நயன்தாரா.
மாயா வரிசையில் கனெக்ட் படமும் ஹாரர் படமாகவே உருவாகியுள்ளது. முன்னதாக நயன்தாரா நடித்த O2 படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், திரையரங்குகளில் ’கனெக்ட்’ வெளியாக உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனுபம் கெர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். முன்னதாக, கனெக்ட் படத்தின் டீசர் வெளியாகும் என விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் இன்ஸ்டா பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அதில், “இது அலறுவதற்கான நேரம் எல்லாரும் தயாராகுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
வரவேற்பபைப் பெற்ற டீசர்:
நயன்தாராவின் பிறந்தநாளன்று, கனெக்ட் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேப்பை பெற்றது. விக்ன்ஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸின் இன்ஸ்டா பக்கத்தில் கனெக்ட் பட டீசர் வெளியீட்டின் அறிவிப்பிலிருந்து நயன்தாராவின் ரசிகர்கள் டீசருக்காக ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து, வெளியடப்பட்ட டீசர், அவர்களின் எதிர்பார்ப்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு உள்ளதாக பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த டீசரில், நயன்தாராவுடன் இருக்கும் குழந்தைக்கு பேய் பிடித்துள்ளது போல கதையமைக்கப்பட்டுள்ளது.
ரிலீஸ் தேதி அறிவிப்பு:
பேய் படமாக உருவாகியுள்ள கனெக்ட் படம், 99 நிமிட நீளத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இடையே, இன்டர்மிஷன் இல்லை என்ற தகவலையும் ரெளடி பிக்சர்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தமிழ் மொழியில் உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் 22ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. கனெக்ட் படத்திற்கு, அனைத்து வயதினரும் பார்க்கும் வகையில் யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் செய்தியை கேட்டதில் இருந்து, நயன்தாராவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.