தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். ஹீரோக்களுக்கு நிகராக அதிகமான சம்பளம் பெரும் இந்த நடிகைக்கு ஏராளமான ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி பெண்களையும் தனது அளவு கடந்த அழகால் வசீகரித்தவர்.
சமீபகாலமாக நயன்தாரா வுமன் சென்ட்ரிக் திரைப்படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். ஒரு நடிகைக்கு திரைத்துறையில் சாதிக்க அழகு மட்டும் போதுமானதல்ல என்பதை தனது சிறப்பான நடிப்பால் நிரூபித்தவர். நயன்தாராவின் அழகான தோற்றத்திற்கு முக்கியமான காரணம் அவரின் ரொட்டின் ஸ்கின் கேர் ரகசியங்கள் தான்.
முக்கிய பங்கு வங்கிக்கு யோகா :
நயன்தாரா தனது அழகான தோற்றத்திற்கு ஏராளமான ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் மேற்கொண்டு வருகிறார் என பலரும் நினைக்கலாம். ஆனால் மிகவும் அதிசயமான ஒரு விஷயம் என்றால் நயன் எந்த ஒரு சிறப்பு சிகிச்சையையும் மேற்கொள்வதில்லை. ரெகுலர் வொர்க் அவுட் செய்தாலும் கூட நயனுக்கு மிகவும் விருப்பப்பட்டு செய்வது யோகா. அவரின் ஃபிட்னெஸ் ட்ரெய்னர் ரெகுலராக கடைபிடிக்க வேண்டியவற்றை பட்டியலிட்டாலும் அதில் அதிக கவனத்தை யோகாவிற்கு ஒதுக்கியுள்ளார். யோகா மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளவதை எந்த ஒரு சமயத்திலும் மறந்ததில்லை.
நயனை பொறுத்தவரையில் முறையான யோகா செய்வதால் உடலை கட்டுக்கோப்பாக மட்டும் வைத்துக் கொள்ள உதவாமல் மனநிறைவையும், அமைதியான மனநிலையையும் கொடுக்கும் என்கிறார். அதனோடு சேர்த்து எந்த ஒரு சமரசமும் இல்லாமல் எட்டு மணி நேரம் போதுமான அளவு தூக்கத்தையும் கடைபிடிக்கிறார்.
சிம்பிள் டயட் பிளான் :
நயன்தாரா கடைபிடிக்கும் டயட் பிளான் குறித்த தகவலை அவர் வெளிப்படையாக வெளியிடவில்லை என்றாலும் அவர் அளவோடு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் பழக்கம் கொண்டவர். காய்கறிகள், இறைச்சி, முட்டை, மீன் மற்றும் பழங்கள் அனைத்தையும் தனது ரெகுலர் டயட் பிளானில் சேர்த்துக் கொள்வார்.
அதிகமாக தேங்காய் தண்ணீர் குடிக்க விருப்பப்படுவாராம் நயன். தனது கட்டுக்கோப்பான உடலமைப்பிற்கு பெரிய அளவில் எந்த ஒரு ஸ்பெஷல் பிளானும் மேற்கொள்வதில்லை . ஒரு சூப்பர் ஸ்டாரை போல் அல்லாமல் ஒரு சாதாரண வாழ்வை வாழவே ஆசை படுபவர் நயன்தாரா.
ஸ்பெஷல் டயட்டா?
ஒரு முறை அவரின் டயட் பிளான் மற்றும் ரெகுலர் ஒர்க் அவுட் குறித்து கேட்டதற்கு நயன் பதிலளிக்கையில் " நான் எந்த ஒரு ஸ்பெஷல் டயட் அல்லது ஒர்க் அவுட்டை பின்பற்றவில்லை. அதே சமயத்தில் எந்த ஒரு உணவையும் தவிர்த்தும் இல்லை. ஷூட்டிங் சமயத்தில் கூட மற்ற உநிட் உறுப்பினர்கள் என்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன்" என கூறியுள்ளார்.