அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள மலையாள திரைப்படம் கோல்டு. தமிழ் மற்றும் மலையாளத்தில் டிசம்பர் 1 வெளியாக தயாராக இருக்கும் இப்படத்தின் தமிழ் வர்ஷன் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


 



செப்டம்பர் டு டிசம்பர் தள்ளிப்போன ரிலீஸ் தேதி :


பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் & மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுப்ரியா மேனன் மற்றும் லிஸ்டன்ஸ் ஸ்டீபன் தயாரிப்பில் ராஜேஷ் முருகேசன் இசையில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் பிரித்விராஜ், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் 'கோல்டு'. ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் மாதமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், படத்தின் பணிகள் முழுமை அடையாத காரணத்தினால் டிசம்பருக்கு ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. அந்த வகையில் 'கோல்ட்' திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர் படக்குழுவினர். 


 







தமிழ் ரிலீஸ் தேதியில் மாற்றம் :


கோல்ட் திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இப்படத்தின் தமிழ் டப்பிங் ரிலீஸ் இன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோல்ட் படத்தின் தமிழ் வர்ஷன் டிசம்பர் 2ம் தேதி(நாளை) வெளியிடப்பட உள்ளது. எனினும் இப்படத்தின் மலையாள வர்ஷன் அறிவித்த படி டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழில் டப்பிங் செய்யப்பட்ட கோல்ட் படத்தின் தமிழ் வர்ஷனின் சென்சார் ப்ராசஸ் தாமதமானது தான் இந்த ரிலீஸ் தேதி தள்ளி போவதற்கான காரணம். இருப்பினும் கோல்ட் படத்தின் மலையாள வர்ஷன் இன்று உலகெங்கிலும் ஆங்கில சப்-டைட்டிலுடன் வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் மட்டும் இன்று வெளியிடப்படும். 


 






 


பிரேமம் வெற்றியை முறியடிக்குமா கோல்ட் :


கோல்ட் திரைப்படத்தில் ரோஷன் மேத்யூ, தீப்தி சதி, அஜ்மல் அமீர், செம்பன் வினோத் ஜோஸ், வினய் ஃபோர்ட், சைஜு குருப், ஷம்மி திலகன் மற்றும் சாபுமோன் அப்துசமத் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'பிரேமம்' திரைப்படத்தை இயக்கிய அல்போன்ஸ் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு 'கோல்ட்' படத்தை  இயக்குகிறார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பிரேமம் திரைப்படத்தைப் போலவே இப்படத்திற்கும்  அமோகமான வரவேற்பு கிடைக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.